மருக்கள் வருதா? அலட்சியம் வேண்டாம், உடனே இதை செய்யுங்க...
மருக்கள் ஒரு விதமான பரவக் கூடிய தோல் நோய் ஆகும். இதனை ஆரம்ப நிலையிலே கண்டறியவில்லை என்றால் உடல் முழுக்க பரவி அசிங்கமான தோற்றத்தை கொடுக்கும். எளிய முறையில் வீட்டிலே எப்படி சரி செய்வது என பார்க்கலாம்...
தோல் நோய்களில் மிகவும் எளிதாக வருவது மருக்கள் இதனை வாட்ஸ் என்றும் ஆங்கிலத்தில் அழைப்பார்கள். இது பொதுவாக முகம், கை, கால், கழுத்து பகுதிகளில் அதிகமாக வரும். சில நேரங்களில் உடல் முழுக்க ஆங்காங்கே தென்படுவதுமுண்டு. நம் உடலில் உள்ள கழிவுகள் தான் மருக்களாக வந்து உருவெடுத்து இருப்பதாகவும் முடிகளைக் கொண்டு கட்டி வைத்தால், ஊது பத்தி கொண்டும் சூடு வைத்தால் உதிர்ந்துவிடும் என்றும் நினைக்கிறார்கள். ஆனால், இது HPV என சொல்லக்கூடிய ஹியூமன் பாபிலோமா வைரஸ் நம் தோலில் பட்டு அதன் மூலமாக உடல் முழுக்க பரவுவதாக தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள். இந்த வைரஸ் தொற்று உள்ளவர்களிடம் நாம் நேரடி தொடர்பு வைத்துக் கொண்டால் நமக்கும் அது எளிதில் வர வாய்ப்பு உண்டு. உடல் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் இந்த மருக்கள் தோன்றும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஒருவர் பயன்படுத்திய சோப் அல்லது டவல் மற்றோருவர் பயன்படுத்துவது மூலம் பரவ வாய்ப்பிருக்கிறது. இதனை லேசர் சிகிச்சை மூலமாக மருத்துவர்கள் அகற்றுவார்கள்.ஆனால் நாம் இதனை வீட்டிலேயே எளிய ஹெர்பல் முறையில் எளிதாக சரி செய்து கொள்ளலாம்.
அம்மான் பச்சரிசி இலையை கிள்ளினால் அதிலிருந்து பால் வரும், அந்த பாலை தினமும் இந்த மருக்களின் மீது வைத்து வந்தால், சில நாட்களிலே அது காய்ந்து உதிர்ந்துவிடும். கைப்பிடி அளவு சிகப்பு நாயுருவி இலை, ஒரு சுண்டைக்காய் அளவு சுண்ணாம்பு, கால் தேக்கரண்டி வாஷிங் சோடா சேர்த்து அரைத்து ஒரு டப்பாவில் போட்டு மூடிவைத்துக் கொள்ளவும். இதனை தொடர்ந்து ஏழு நாட்கள் பருக்களின் மேல் போட்டு வரவும். அவ்வாறு செய்து வரும் பொது மருக்கள் எளிதாக காய்ந்து உதிர்ந்து விடும். இது எளிதான மருத்துவ முறை.
இதையும் படிங்க: தோல் நோய்கள் வராம இருக்கணுமா ? உங்களுக்கான பதிவு தான் இது
டீ ட்ரீ ஆயில் என்ற எண்ணெயை மருக்கள் மீது வைத்து வந்தால், நாளடைவில் அது காய்ந்து உதிர்ந்துவிடும். ஆப்பிள் சீடர் வினிகர் 1 ஸ்பூன் அளவுடன் 1 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கலந்து பஞ்சை கொண்டு நினைத்து தினமும் வைத்து வரவேண்டும். அப்படி செய்யும் பொது அது தானாக காய்ந்து உதிர்ந்துவிடும்.
வெங்காயச் சாறு, கல் உப்புத்தூள் இரண்டையும் சேர்த்து கலந்து மருக்கள் மீது தினமும் வைத்து வரவேண்டும். முதலில் கொஞ்சம் எரிச்சலாக இருக்கும் பிறகு சரியாகிவிடும். இதனை தினமும் ஒரு வாரம் செய்து வந்தாலே உதிர்ந்துவிடும்.
மேற்கூறிய முறைகளில் வீட்டிலேயே எளிய முறையில் மருக்களை அகற்றிக்கொள்ள முடியும். மேலும், சோப், டவல் உள்ளிட்ட பொருட்களை தனக்கென்று தனியாக வைத்துக் கொண்டு சுகாதாரமாக இருத்தல், நோய் எதிர்ப்பு சக்திகளை உடலில் வளர்த்துக் கொள்ளும் பயிற்சி மற்றும் உணவு முறைகளை கடைபிடித்தல் மருக்கள் வராமல் தவிர்க்க உதவும்.
இதையும் படிங்க: தோல் நோய்கள் வராம இருக்கணுமா ? உங்களுக்கான பதிவு தான் இது