×
 

இன்றைய ராசிபலன் (06-12-2025)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பணவரவில் பஞ்சமில்லை..!!

12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்..!

இன்றைய பஞ்சாங்கமும் ராசிபலனும்:

(டிசம்பர் 06, 2025 - சனிக்கிழமை)
தமிழ் பஞ்சாங்க விவரம்
வருடம் : விசுவாவசு
மாதம் : கார்த்திகை 20
திதி : அதிகாலை 4:42 வரை துவாதசி, பின்னர் திரயோதசி
நட்சத்திரம் : இரவு 10:14 வரை பூசம், அதன் பிறகு ஆயில்யம்
யோகம் : சித்த யோகம், மரண யோகம்

நல்ல நேரம் : காலை 10:45 - 11:45, மாலை 4:45 - 5:45
ராகுகாலம் : காலை 9:00 - 10:30
எமகண்டம் : பிற்பகல் 1:30 - 3:00
குளிகை : காலை 6:00 - 7:30
கௌரி நல்ல நேரம் : நண்பகல் 12:15 - 1:15, இரவு 9:30 - 10:30
சூலம் : கிழக்கு திசை (பயணம் தவிர்ப்பது நல்லது)
சந்திராஷ்டமம் : அனுஷம், கேட்டை

இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (04-12-2025)..!! இந்த ராசிக்கு இன்று பொருளாதாரத்தில் உயர்வு உண்டு..!!

இன்றைய ராசிபலன்

மேஷம்: தொழில் சார்ந்த வெளிநாட்டுப் பயணம் கைகூடும். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். வெளியில் மதிப்பு உயரும். அலுவலர்கள் உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர். மாணவர்களின் சோம்பேறி போக்கு நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு.

ரிஷபம்: சொந்தத் தொழிலில் வெளிநாட்டு விரிவாக்கம் சாத்தியம். ஊழியர்களுக்கு பதவி-சம்பள உயர்வு. வழக்கறிஞர்கள் புகழ் பெறுவர். மாணவர்கள் வாகனப் பயணத்தில் கூடுதல் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: ஊதா.

மிதுனம்: குடும்பத் தலைவிகளுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும். வெளிநாட்டில் உள்ள பிள்ளை தாயகம் வர திட்டமிடுவார். பழைய நண்பர்கள் மீண்டும் நெருக்கமாவர். உற்சாகம் பெருகும். அதிர்ஷ்ட நிறம்: கிரே.

கடகம்: சொத்து வழக்குகளில் நிதானம் தேவை. குடும்பத் தலைவிகள் நிரந்தர வருமானத்திற்கு டெபாசிட் திட்டம் துவங்குவர். தம்பதிகளிடையே அன்பு பெருகும். பாக்கித் தொகை வசூல் ஆகும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு.

சிம்மம்: வியாபாரத்தில் போட்டிகளை முறியடித்து வெற்றி காண்பீர்கள். இழந்த மரியாதை மீட்கப்படும். நீரிழிவு நோயாளிகள் இனிப்பு உணவைத் தவிர்க்கவும். அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்.

கன்னி: நகைச் சீட்டு, வங்கிக் கடன் போன்றவை கைகூடும். மாமியார் வீடு ஆதரவாக இருக்கும். உயர்கல்வியில் வெற்றி. மாதவிடாய் உபாதைகள் குறையும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்.

துலாம்: ஆன்மீக யாத்திரைகள் மேற்கொள்வீர்கள். பதவி-சம்பள உயர்வுடன் பணிச்சுமையும் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு லாபம் இரட்டிப்பு. மாணவர்கள் விளையாட்டில் சாதனை புரிவர். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை.

விருச்சிகம்: சந்திராஷ்டம நாள் என்பதால் அமைதியாக இருப்பது மிக அவசியம். வாக்குவாதம் தவிர்க்கவும். புதிய முயற்சிகளை ஒத்திப் போடவும். இறைவழிபாடே சிறந்தது. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு.

தனுசு: இளம் பெண்களுக்கு நல்ல வரன் அமையும். குழந்தைகளின் பிடிவாதம் குறையும். வீடு, அறை கட்டுதல் போன்ற காரியங்கள் பலிதமாகும். பெண்களுக்கு அலுவலகத்தில் மரியாதை கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்.

மகரம்: பாகப் பிரிவினை பிரச்னைகள் தீர்க்கப்படும். குழந்தைகளின் எதிர்காலத்திற்கு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்.

கும்பம்: நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். கடன் பாக்கி தீரும். நண்பர்கள் வீட்டிற்கு வருகை தருவர். இடுப்பு-மூட்டு வலி சற்று தொல்லை தரலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம்.

மீனம்: பணியிடத்தில் நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறும். தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுப்பர். அக்கம்பக்கத்தினர் உதவுவர். அதிர்ஷ்ட நிறம்: பச்சை.

இன்று அமைதியும் நிதானமும் மிக முக்கியம். அனைவருக்கும் இனிய நாளாக அமைய இறைவனை வேண்டுவோம்! இந்த பலன்கள் உங்கள் நாளை சிறப்பாக்க உதவும். ஜோதிடம் ஒரு வழிகாட்டி மட்டுமே; உங்கள் முயற்சிகளே வெற்றியின் அடிப்படை. நாளை மீண்டும் சந்திப்போம்..!
 

இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (27-11-2025)..!! இந்த ராசிக்காரர்களுக்கு பழைய கடன் தீரும்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share