இன்றைய ராசிபலன் (23-01-2026)..!! இந்த ராசிக்கு இன்று பணம் கொட்டப்போகுது..!!
12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்..!
இன்றைய பஞ்சாங்கம்
கிழமை: வெள்ளிக் கிழமை
தமிழ் வருடம்: விசுவாவசு
தமிழ் மாதம்: தை
நாள்: 9
ஆங்கில தேதி: 23
மாதம்: ஜனவரி
வருடம்: 2026
நட்சத்திரம்: இன்று பிற்பகல் 02-08 வரை பூரட்டாதி பின்பு உத்திரட்டாதி
திதி: இன்று அதிகாலை 02-08 வரை சதுர்த்தி பின்பு பஞ்சமி
யோகம்: சித்த யோகம்
நல்ல நேரம்: காலை 9-30 to 10-30
நல்ல நேரம்: மாலை 1-30 to 2-30
ராகு காலம்: காலை 10-30 to 12-00
எமகண்டம்: மாலை 3-00 to 4-30
குளிகை: காலை 7-30 to 9-00
கௌரி நல்ல நேரம்: காலை 12-30 to 1-30
கௌரி நல்ல நேரம்: மாலை 6-30 to 7-30
சூலம்: மேற்கு
சந்திராஷ்டமம்: மகம், பூரம்
மேஷம்
உத்யோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களுடன் நல்உறவு ஏற்படும். பொறுமையுடன் செயல்படும் நாளாக அமையும். இரவில் நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவும். கணவனிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும்.அதிர்ஷ்ட நிறம்: பச்சை
இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (21-01-2026)!! கடகத்திற்குச் சந்திராஷ்டமம்; உங்கள் ராசிக்கு என்ன பலன்?
ரிஷபம்
பணவரவால் மனம் மகிழும். எதிர்பார்த்த நற்செய்தி கிடைக்கும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரம் செழிப்புறும். வெளிநாட்டுத் தொடர்பால் நன்மை கூடும். மார்கெட்டிங்துறையில் உள்ளவர்கள் தங்கள் அமைதியான அணுகுமுறையால் அதிக ஆர்டர்களை பெறுவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை காப்பர்.அதிர்ஷ்ட நிறம்: ஊதா
மிதுனம்
உத்யோகஸ்தர்கள் தேங்கிக் கிடந்த வேலைகளை முடித்துவிடுவீர்கள். இளைஞர்களுக்கு திருமண யோகம் ஏற்படுவதால் முயற்சியுங்கள். நீண்ட நாட்களாக தங்கள் பெற்றோர்கள் உடல் நிலை சரியில்லாமல் இருப்பவர்களுக்கு உடல் நலம் சீராகும். குல தெய்வ கோவில் செல்வீர்கள்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
கடகம்
வியாபாரிகள் விற்பனையைக் கூட்ட விளம்பரம் செய்வார்கள். சிலருக்கு காதல் மலரும். உதயோகஸ்தர்கள் தங்கள் வேலைகளை விரைவில் முடிப்பர். பிரபலங்களின் எதிர்பாராத சந்திப்பு நிகழும், அவர்களால் நன்மைகள் உண்டு. திடீர் வெளியூர் பயளாம் உண்டு. உறவினர்களை பார்த்து மகிழ்வீர்கள். உடல் நலம் சிறக்கும்.அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்
சிம்மம்
தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை அதாவது தங்கள் தொழில் சார்ந்தவர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் சந்திராஷ்டமம் என்பதால் சாதாரணமாக பேசும் வார்த்தைகள் கூட பிரச்சினையைத் தந்து நிரந்தரமாக பேசாமல் போக வாய்ப்புள்ளதால கவனம் தேவைஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
கன்னி
குடும்பத் தலைவர்கள் நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த முக்கியமான வேலைகள் இன்று முடித்துக் காட்டுவீர்கள். வியாபாரத்திய புதிய யுத்திகளை பயன்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சலுகை கிடைக்கும் நண்பர்களுடன் வெளியிடங்களுக்குச் செல்விகள்அதிர்ஷ்ட நிறம்: நீலம்
துலாம்
தங்கள் பெண்ணுக்கு நல்ல வரண் அமையும். அரசாங்க வேலை அனுகூலமாகும். வீட்டில் பெரியவர்களிடம் ஆவேசமாக பேச வேண்டாம்.. வேலையில் தங்கள் மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். காதலர்கள் பொறுமையுடன் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகள் கைக்கு வந்துசேரும்.அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்
விருச்சிகம்
உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு பெரிய பேனர்களில் இருந்து அழைப்பு வரும். வீடு வாங்க கடன் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது நல்லது. தேகம் பளிச்சிடும்.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
தனுசு
எடுக்கும் காரியங்கள் வெற்றி தரும். நண்பர்கள் விட்டுக் கொடுப்பார்கள். குடும்பப் பிரச்சினை தீரும். அவர்களாகவே தங்களிடம் வந்து மன்னிப்புக் கேட்பர். வியாபாரிகளுக்கு புதிய தொடர்புகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு பட விநியோகஸ்தர்கள் கிடைப்பர். தேகம் புதுப்பொலிவுடன் காணப்படும்.அதிர்ஷ்ட நிறம்: பச்சை
மகரம்
வீட்டில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் குவியும். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். நிர்வாகத் திறமையால் பதவி உயரும். புது நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர்கள். மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெறுவர்.அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்
கும்பம்
கலைத்துறையினருக்கு தடைப்பட்டிருந்த உங்களுடைய படைப்புகள் வெளியாகும். வரவேற்பு அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளுங்கள். அதிவேகமாக வாகனத்தை இயக்க வேண்டாம். மாணவர்கள் நன்கு படிப்பர். எதிரிகளின் தொல்லைகள் அகலும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
மீனம்
தொழிலில் ஒரு புதிய அனுபவம் கிடைக்கும். வெளிவட்டார நண்பர்களிடம் கவனம் தேவை. மனைவிக்கு வேண்டியதை வாங்கிக் கொடுத்து மதிப்பளிப்பீர்கள். வெளியிடங்களுக்குச் சென்றுவருவீர்கள். உணவுக் கட்டுப்பாடு அவசியம். மார்கெட்டிங்பிரிவினர்களுக்கு ஒரு கணிசமான வருவாய் வந்து சேரும்.அதிர்ஷ்ட நிறம்: கிரே
இந்த பலன்கள் உங்கள் நாளை சிறப்பாக்க உதவும். ஜோதிடம் ஒரு வழிகாட்டி மட்டுமே; உங்கள் முயற்சிகளே வெற்றியின் அடிப்படை. நாளை மீண்டும் சந்திப்போம்..!
இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (19-01-2026)..!! மிதுனத்திற்கு சந்திராஷ்டமம்; யாருக்கு லாபம்?