×
 

கார் வாங்குறீங்களா? உடனே வாங்குங்க! ஏப்ரலில் விலை ஏற போகுது! வருகிறது புதிய வாகன சோதனை முறை!

மத்திய சாலை பாதுகாப்பு மற்றும் நெடுஞ் சாலைத்துறை அமைச்சகம், 'மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989ல் திருத்தம் செய்து, புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989-ஐ திருத்தி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 2027 ஏப்ரல் 1 முதல், பாரத் ஸ்டேஜ்-6 (BS-6) தரநிலை கொண்ட M1 மற்றும் M2 வகை வாகனங்களின் உமிழ்வு (எமிஷன்) சோதனை, உலகளாவிய ஒருங்கிணைந்த இலகுரக வாகன சோதனை நடைமுறை (WLTP) முறையின்படி நடத்தப்படும்.

M1 வகையில் SUV, ஹேட்ச்பேக், செடான், MPV போன்ற பயணியர் கார்களும், M2 வகையில் 8க்கும் மேற்பட்ட இருக்கைகள் கொண்ட பயணியர் வாகனங்களும் (வேன்கள், சிறு பேருந்துகள்) அடங்கும். தற்போது இவை MIDC (மாடிஃபைடு இந்தியன் டிரைவிங் சைக்கிள்) முறையில் சோதிக்கப்படுகின்றன. WLTP ஐரோப்பாவில் 2018 முதல் பயன்பாட்டில் உள்ளது. இது உண்மையான சாலை நிலைமைகளை மிகத் துல்லியமாக பிரதிபலிக்கும்.

இந்த மாற்றத்தால் கார்களின் அறிவிக்கப்பட்ட மைலேஜ் 10 முதல் 20 சதவீதம் வரை குறையும் என வாகன நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். WLTP-யில் சராசரி வேகம் 46.5 கி.மீ., 30 நிமிடம், 23 கி.மீ. தூரம், பல்வேறு வேக மாற்றங்களுடன் சோதனை நடக்கும். தற்போதைய MIDC-யில் 31 கி.மீ. சராசரி வேகம், 20 நிமிடம், 11 கி.மீ. மட்டுமே. இதனால் உமிழ்வு அளவும் 15-25 சதவீதம் அதிகமாகக் காட்டப்படும்.

இதையும் படிங்க: கஜகேசரி யோகத்தால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு மூணு மடங்கு ஜாக்பாட் அடிக்கப்போகுதாம்...உங்க ராசி இதுல இருக்கா?

இதை சமாளிக்க கார் நிறுவனங்கள் எஞ்சின், ட்ரான்ஸ்மிஷன், எக்ஸாஸ்ட் சிஸ்டம் ஆகியவற்றை மேம்படுத்த வேண்டியிருக்கும். ஹைப்ரிட், அதிக திறன் கொண்ட டெக்னாலஜி பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் புதிய கார்களின் விலை 5 முதல் 10 சதவீதம் உயர வாய்ப்புள்ளது. இருப்பினும், இது சுற்றுச்சூழலுக்கு நல்லது. உண்மையான ஓட்டத்தில் குறைவான மாசு, துல்லியமான மைலேஜ் தகவல் கிடைக்கும்.

இந்த மாற்றம் CAFE (கார்பன் டை ஆக்சைடு) விதிகளுடன் இணைந்து வருவதால், கார் நிறுவனங்கள் அதிக எரிபொருள் திறன் கொண்ட வாகனங்களை உருவாக்க வேண்டியிருக்கும். 2027 முதல் புதிய மாடல்கள் மற்றும் பழைய மாடல்களின் தொடர்ச்சி அனைத்தும் WLTP அடிப்படையில் சான்றிதழ் பெற வேண்டும். கார் வாங்க திட்டமிடுபவர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். மைலேஜ் குறைந்தாலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு முக்கியம்.

இதையும் படிங்க: இன்றைய ராசிபலன்கள் (11.02.2026): இந்த 4 ராசிக்காரர்கள் இன்று ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும்...!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share