காலாஷ்டமி நாளில் காலபைரவருக்கு இந்த ஒன்றை படையுங்கள்… வாழ்க்கையில் தடைகள் நீங்கி வெற்றிகள் குவியும்..!
இந்த நாளில், கால பைரவரை விரதம் இருந்து வழிபடுவதால், வீடு உணவு, செல்வங்களால் நிரம்பியிருக்கும். அனைத்து நோய்களிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும்.
கால சக்கரத்தின் சுழற்றியை மாற்றி, தலைவிதியையே மாற்றி அமைக்கும் சக்தி காலபைரவருக்கு உண்டு. சிவ பெருமானின் 64 வடிவங்களில் காலபைரவர் வடிவமும் ஒன்று. காசி நகரம் மட்டுமின்றி அனைத்து சிவாலங்களில் காவல் தெய்வமாக விளங்கக் கூடியவர் காலபைரவர். இவர் சிவனின் ஐந்து முகங்களில் ஒன்றான தத்புருஷ முகத்தில் இருந்து தோன்றிய ருத்ர வடிவமானவர்.
இந்து மதத்தில் சிறப்பு வாய்ந்த காலாஷ்டமி தினம் சிவபெருமானின் உக்கிர வடிவமான கால பைரவரை வணங்குவதற்கு உகந்த நாள். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியில் காலாஷ்டமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. காலாஷ்டமி நாளில் விரதம் இருப்பதோடு, கால பைரவர் வழிபாடும் செய்யப்படுகிறது. காலாஷ்டமி நாளில் விரதம் இருந்து வழிபடுவது வாழ்வில் செழிப்பைத் தரும்.
இந்து மத நம்பிக்கைகளின்படி, காலாஷ்டமி நாளில் கால பைரவரை விரதம் இருந்து வழிபடுவது வாழ்க்கையின் அனைத்து பிரச்னைகளையும் போக்குகிறது. வெற்றியை ஈட்டித்தருகிறது. காலாஷ்டமி நாளின் வழிபாட்டின்போது மாசி மாதத்தின் அஷ்டமி தேதி பிப்ரவரி 20 ஆம் தேதி காலை 9:58 மணிக்குத் தொடங்கி பிப்ரவரி 21 அன்று காலை 11:57 மணிக்கு முடிவடையும். பிப்ரவரி 20 அன்று காலாஷ்டமி விரதம் அனுசரிக்கப்படும். இந்த நாளில், கால பைரவர் அவருக்கு உண்டான சடங்குகளின்படி வழிபடப்படுகிறார்.
இதையும் படிங்க: பல்சர் பைக் இனி சிஎன்ஜி வடிவில் வரப்போகுது.. பஜாஜ் பல்சர் 150 CNG எப்போ வருது தெரியுமா?
வெற்றிலை மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. காலாஷ்டமி நாளில் பூஜையின் போது கால பைரவருக்கு வெற்றிலை, பாக்கு வைத்து வழிபடுவதன் மூலம் வாழ்க்கையில் எந்தத் தடையும் ஏற்படாது என்றும், ஒவ்வொரு செயலிலும் வெற்றி கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
காலாஷ்டமி நாளில், காலபைரவரை வணங்கும்போது கருப்பு எள்ளை படையலிட வேண்டும். இது கிரக தோஷங்களையும், எதிர்மறை சக்தியையும் அழிக்கிறது. இது சுப பலன்களைத் தரும்.
இந்த நாளில், கால பைரவருக்கு கருப்பு ஆடை, தேங்காயை படைக்கலாம்.இதனால் கால பைரவர் மிகவும் மகிழ்ச்சியடைந்து அருள் புரிவார். அன்று கால பைரவருக்கு கிராம்பு படைக்கலாம். இது திருஷ்டியிலிருந்து நம்மை காக்கிறது.
இந்த நாளில், கால பைரவரை விரதம் இருந்து வழிபடுவதால், வீடு உணவு, செல்வங்களால் நிரம்பியிருக்கும். அனைத்து நோய்களிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். பக்தர்களின் அனைத்து ஆசைகளும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
இதையும் படிங்க: 6 ஏர்பேக்குகள்.. மாருதி சுசுகியின் மலிவான கார்.. ரூ. 5.64 லட்சம் தாங்க..!