×
 

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்..!! நேர ஒதுக்கீடு தரிசன டிக்கெட் விநியோகம் ரத்து!

தரிசன டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டது தெரியாமல் ஏராளமான பக்தர்கள் டிக்கெட் வழங்கும் மையங்களில் நேற்று இரவு முதல் விடிய, விடிய காத்திருந்தனர்.

திருமலை வெங்கடேசப் பெருமானின் திருக்கோயிலில் பக்தர்களின் அலைமோதும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பக்தர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். நேற்று ஒரே நாளில் 82,105 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதில் 34,484 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.5.18 கோடி காணிக்கை வசூலானது. மேலும் 4.17 லட்சம் லட்டுக்கள் விற்பனையாகி சாதனை படைத்தது.

திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களின் வசதிக்காக மூன்று இடங்களில் நேர ஒதுக்கீடு சர்வ தரிசன டிக்கெட்கள் வழங்கி வருகிறது. வார இறுதி நாட்களில் மட்டும் அதிக கூட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது தினசரியும் பக்தர் வருகை அசாதாரணமாக அதிகரித்துள்ளது. இதனால் தரிசன ஏற்பாடுகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை 5 மணிக்கு 10,000 சர்வ தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. அவை வெறும் ஒரு மணி நேரத்திற்குள் தீர்ந்து போனதால், தொலைதூர மாநிலங்களிலிருந்து பேருந்து, ரயில் மூலம் அதிக செலவில் வந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். அதேபோல் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாக 2,000 தரிசன டிக்கெட்டுகளும் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க: திருப்பதிக்கு போறீங்களா..?? இந்த 2 நாள் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்தாம்..!! தெரிஞ்சிக்கோங்க..!!

கூட்டத்தின் அழுத்தம் காரணமாக நாளைய தரிசனத்துக்கான சர்வ தரிசன டிக்கெட்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த முடிவு பக்தர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படாததால், ஏராளமானோர் டிக்கெட் வழங்கும் மையங்களில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பின்னர் தேவஸ்தான அதிகாரிகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்ததும், பக்தர்கள் நேரடி இலவச தரிசனத்துக்கு மலைக்கு புறப்பட்டுச் சென்றனர்.

18 மணி நேர தரிசன நேரத்தில் இலவச தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தேவஸ்தான அதிகாரிகள், “நாளை மறுநாள் தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் வழக்கம்போல் வழங்கப்படும்” என உறுதியளித்துள்ளனர். திருப்பதி கோயில் நிர்வாகம் பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு கூடுதல் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்ச்சியான அதிக கூட்டத்தால் போக்குவரத்து, தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளிலும் சவால்கள் அதிகரித்துள்ளன. தேவஸ்தானம் இந்த நிலையை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: திருப்பதிக்கு போறீங்களா..?? இந்த 2 நாள் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்தாம்..!! தெரிஞ்சிக்கோங்க..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share