×
 

பானிபூரியின் பிறப்புக் கதை.. திரௌபதியுடன் இணையும் மகாபாரத சுவாரஸ்யம்! தெரிஞ்சிக்கோங்க..!!

ஒரே மடக்கில் வாயில் போட்டால், புளிப்பு, காரம், இனிப்பு ஆகிய சுவைகள் ஒன்றிணைந்து அற்புதமான அனுபவத்தைத் தரும்.

இன்று இந்திய தெரு உணவுக் கலாச்சாரத்தில் பெரும் இடம் பிடித்துள்ள பானிபூரி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய மகாபாரத காலத்துடன் தொடர்புடையது என்று பலர் நம்புகின்றனர். திரௌபதியால் உருவாக்கப்பட்டதா அல்லது மகத வம்சத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டதா என்பது குறித்த விவாதம் தொடர்ந்தாலும், இந்தச் சிறிய, சுவையான உணவின் பின்னணியில் ஒரு ஊக்கமளிக்கும் கதை உள்ளது.

பண்டைய காலத்தில் பள்ளி முடித்து வரும் குழந்தைகளுக்கு அதிரசம், முறுக்கு, வடை, பஜ்ஜி போன்ற பாரம்பரிய தின்பண்டங்கள் வழங்கப்பட்டன. ஆனால் நவீன காலத்தில் பிரெஞ்ச் ஃப்ரைஸ், பர்கர், பீட்சா போன்ற உணவுகள் பிரபலமானாலும், பானிபூரி இளம் தலைமுறையினரின் மனதைக் கவர்ந்துள்ளது. பேல் பூரி, தயிர் பூரி, சமோசா பூரி, மசாலா பூரி என பல வகைகள் உருவாகியுள்ளன. சன்னா மசாலா, காளான் போன்ற துணை உணவுகளுடன் இணைக்கப்பட்டு, தெரு முனைகளில் பிரபலமாக விற்கப்படுகிறது.

பானிபூரியின் அடிப்படை ருசி அதன் எளிமையில்தான் உள்ளது. சிறிய, மொறுமொறுப்பான பூரிகளுக்குள் உருளைக்கிழங்கு மசாலா நிரப்பப்பட்டு, புளி, உப்பு, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி கலந்த பச்சை நீர் (பானி) மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்க்கப்படும். ஒரே மடக்கில் வாயில் போட்டால், புளிப்பு, காரம், இனிப்பு ஆகிய சுவைகள் ஒன்றிணைந்து அற்புதமான அனுபவத்தைத் தரும்.

இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (28-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நண்பர்களுடன் நல்ல உறவு தொடரும்..!!

மகாபாரதத் தொடர்பு: அமர்சித்ர கதை உள்ளிட்ட பல புராண நூல்களில் இடம்பெற்றுள்ள கதைப்படி, பஞ்சபாண்டவர்களின் தாய் குந்தி தேவி, திருமணமான புதிதில் தன் மருமகள் திரௌபதியின் சமையல் திறனைச் சோதிக்க விரும்பினார். கொஞ்சம் உருளைக்கிழங்கு மசாலா மற்றும் ஒரு சிறிய சப்பாத்திக்கு மட்டுமே போதுமான கோதுமை மாவை அளித்து, “இவற்றைக் கொண்டு ஐந்து பேரின் பசியையும் தீர்க்க வேண்டும். ஆனால் அவர்கள் வயிறு நிறைந்துவிட்டது என்று சொல்லக் கூடாது” என்று சவால் விட்டார்.

திரௌபதி சமயோஜிதமாகச் செயல்பட்டார். மாவை சிறு உருண்டைகளாக்கி எண்ணெயில் பொரித்து பூரிகளாக மாற்றினார். உள்ளே உருளை மசாலாவைத் திணித்து பாண்டவர்களுக்கு பரிமாறினார். அந்தச் சிறிய உணவு அனைவருக்கும் போதுமானதாக அமைந்தது. தன் மகன்களின் பசியைத் திறமையாகப் போக்கியதற்காக குந்தி மகிழ்ந்து, “இந்த உணவுக்கு அழிவே இருக்காது” என்ற வரம் அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனாலேயே பானிபூரி இன்றும் பிரபலமாகத் தொடர்கிறது என்பது நம்பிக்கை.

சில வரலாற்று ஆதாரங்கள் மகத வம்ச காலத்தில் இது ‘புல்கி’ என்ற பெயரில் அறிமுகமானதாகக் கூறினாலும், உருவாக்கியவர் குறித்த தெளிவான பதிவுகள் இல்லை. திரௌபதியோ அல்லது பிறரோ உருவாக்கியிருந்தாலும், இன்று இது அனைவரின் ஃபேவரைட் ஸ்நாக்ஸாக விளங்குகிறது. மாலை 5 மணிக்கு தெருக் கடைகளில் புகை கிளப்பும் பானிபூரியின் மணம் நாக்கை ஊறச் செய்கிறது. பாரம்பரியத்தையும் நவீனத்தையும் இணைக்கும் இந்தச் சுவையான பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இதையும் படிங்க: சிறுவாபுரியில் முழங்கிய ‘வேல் வேல் முருகன்’ கோஷம்.. 108 வேல் யாத்திரை கோலாகல தொடக்கம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share