மகர ஜோதி தரிசனமும் , அறிந்து கொள்ள வேண்டிய தகவலும்
மகர விளக்கு பூஜைக்காக ஆண்டுதோறும் சபரி மலையில் லட்சக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வார். இந்த பூலோகத்திற்கு ஐயப்பனே ஜோதி வடிவில் வந்து காட்சி தருவதாக நம்பிக்கை உண்டு. அது குறித்து சொல்லப்படும் கதையை இங்கே பார்ப்போம்.
மகர ஜோதியானது பொன்னம்பலமேட்டின் மலை உச்சியில் இரண்டு முதல் மூன்று நிமிடம் வரை நீடித்து இருக்கும், ஆனால், அது மூன்று முறை மட்டுமே காண்பிக்கப்படும். அதனை கண்டு வழிபட்டால் நாம் நினைத்தது நடக்கும், நம் கஷ்டங்கள் நீங்கி செயல்களில் வெற்றி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆகையால் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சரணம் ஐய்யப்பா...! சரணம் ஐய்யப்பா...! என்று கோஷாமிடுவர்.
இந்த மகர ஜோதியை காண வேண்டி கேரளாவின் அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் பக்தர்கள் வருவர். இந்த வருடம் 2025 ஜனவரி 14ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் மகர ஜோதி தரிசனம் நடைபெறும். கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பக்தர்கள் இதில் பங்கெடுப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு கேரள மாநில காவல்துறையினரின் கட்டுப்பாடுகள் போடப்பட்டு கண்காணிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படுவதுண்டு.
மகர ஜோதியை முன்னிட்டு கோயிலின் நடை திறக்கப்பட்டு ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம், சந்தன அபிஷேகம் என நாள் தோறும் பூஜைகள் நடைபெறும். இந்த நாளில் ஐயப்பனுக்கு அனுவிக்கப்படும் திருவாபரணங்கள் பந்தளம் அரண்மனையிலிருந்து கொண்டுவரப்படும். பந்தளத்திலுள்ள சாஸ்தா கோயிலில் இந்த திருவாபரணங்கள் வைத்து அதற்கு பூஜை செய்து வழிபாடு நடத்தப்படுகிறது. இங்கு விமர்சையாக நடைபெறும் இந்த பூஜையிலும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வர்.
இதையும் படிங்க: ஹோண்டா சிட்டி கார்களில் மிகப்பெரிய தள்ளுபடி.. இந்தியாவே வாங்கிட்டு இருக்கு!
அடுத்ததாக திருவாபரணங்கள் ஒரு வெள்ளிப் பேழையில் அடைக்கப்பட்டு குருசாமி குழுவினரால் தலையில் சுமந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு கொண்டுவரப்படும். வழி நெடுகிலும் வானில் கருடன் வட்டமிட்டு அருள்பாலித்து காவலாக வருவார்.
திருவாபரங்கள் அடங்கிய வெள்ளி பெட்டியில் அங்கி, சாஸ்தா முகம், இரண்டு யானைகள், ஒரு புலி, பூந்தட்டு, நவரத்தின மோதிரம், வலம்புரி சங்கு, எருக்கம்பூ, மணி மாலைகள், தங்கத்தில் பூஜை பாத்திரங்களை மகரஜோதி தரிசனத்திற்கு கொண்டுவரப்படும்.
ஐயப்பன் ஆசிபெற்ற மஞ்ச மாதாவிற்கு திருவாபரண பெட்டியிலுள்ள இரண்டு யானைகள், அங்கி உள்ளிட்ட பொருட்கள் அணிவித்து வழிபாடு நடத்தப்படும்.
திருவாபரணங்கள் சன்னிதானத்துக்கு வரும் முன்பே சுத்திகிரியை புஜைகள், பிம்பசுத்தி பூஜைகளை செய்து முடிப்பர். பின்னர், சன்னிதானம் வந்தடைந்த திருவாபரணம் ஐயப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படும். அடுத்த சில மணி நேரங்களில் மகரஜோதி தரிசனமும் பக்தர்களின் சரண கோஷங்களுக்கிடையே நடைபெறும்.
இவ்வாறாக, ஆண்டுதோறும் நடைபெறும் மகரஜோதிக்கு அகத்தியர் மன்னரிடம் கூறியதாக ஒரு கதை சொல்லப்படுவதுண்டு. புவியாலும் மாமன்னராக இருந்தாலும் அனைத்து சுக வாழ்க்கையையும் துறந்து ஒரு மண்டல காலம் கடுமையான விரதமிருந்து, ஆசை, கன்மம், காமம் முதலிய குணங்களை அகற்றி இறைவனிடம் சரணாகதி அடைந்து திருவாபரணங்களை அணிந்த அய்யப்பனை தரிசித்து, மகர ஜோதியை கண்டால் முக்தி பேறு கிடைக்கும் என்று சொல்லப்பட்டது. இந்த பூலோகத்திற்கு ஐயப்பனே ஜோதி வடிவில் வந்து காட்சி தருவதாக நம்பிக்கை உண்டு. அகத்திய மா முனி அருளாசிபெற்று சொல்லப்பட்ட இந்த வழிமுறையை ஒவ்வொரு மகர ஜோதி காலங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது.
இதனை 48 நாட்கள் கடுமையான விரதமிருந்து சபரிமலைக்கு வரும் பக்தர்கள், சன்னிதானத்தில் பதினெட்டு படிகளில் ஏறி சுவாமி ஐயப்பனை நேரில் தரிசனம் செய்து, மகர ஜோதியையும் கண்டு வழிபடுவர். அதனை கண்டு வழிபட்டால் நாம் நினைத்தது நடக்கும், நம் கஷ்டங்கள் நீங்கி செயல்களில் வெற்றி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இதையும் படிங்க: சிட்ரோயன் பாசால்ட் vs டாடா கர்வ்: பிரீமியம் கூபே எஸ்யூவி இடையே கடும் போட்டி!