×
 

விநாயகர் சதுர்த்தி 2025: இன்று விநாயகருக்கு இந்த 3 விஷயங்களை செய்தால்... வீட்டில் செல்வம் செழிக்கும், கடன் பிரச்சனை நீங்கும்...!

விநாயகர் சதுர்த்தி நாளில், ஒவ்வொரு வீட்டிலும் விநாயகர் அருளைப் பெற பூஜைகள் செய்யப்படுகின்றன. விநாயகர் அருளை மிகுதியாகப் பெற பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பார்ப்போம்.

வினை தீர்க்கும் விநாயகனை இந்த நான்நாளில் வழிபட்டால் அனைத்து சிரமங்களையும் நீக்குவார் என நம்பப்படுகிறது. நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று கடன் பிரச்சனைகள் தீர, சிரமங்கள் நீங்க, வேண்டுதல்கள் நிறைவேற வேண்டும் என நீங்கள் விரும்பினால், இந்த 3 விஷயங்களை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். 

அருகம்புல் பரிகாரம்: 

விநாயகருக்கு மிகவும் பிடித்தமான அருகம்புல்லைக் கொண்டு இன்று பூஜிக்க வேண்டும். 11 அருகம்புல்கள் மீது மஞ்சள் தடவி அதனை ஒரு மஞ்சள் துணியில் சுற்றி விநாயகர் சதுர்த்தி முதல் விநாயகரை ஆற்றில் கரைக்கும் இறுதி நாள் வரை பூஜை செய்ய வேண்டும். கடைசி நாளில் அந்த அருகம்புல் அடங்கிய மஞ்சள் துணியை வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் வைத்தால், நிதி சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும். 

வெல்லத்தை மறக்காதீர்கள்: 

விநாயகருக்கு வெல்லம் மிகவும் பிடித்தமானது. எனவே விநாயகர் சதுர்த்தி அன்று வெல்லத்தை பசுவுக்கு உணவாக கொடுப்பது செல்வத்தை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் கோவிலில் 21 வெல்லக் கட்டிகளை, அருகம்புல்லுடன் சேர்த்து பசுவிற்கு உணவாக கொடுக்க வேண்டும். அப்படி செய்தால், உங்கள் விருப்பங்களை நிறைவேற்றும் என்றும் நம்பப்படுகிறது. வீட்டில் உள்ள தடைகள் மற்றும் சிரமங்கள் நீங்கி மகிழ்ச்சி உருவாகும் என்றும் நம்பப்படுகிறது.

விநாயகர் யந்திர நிறுவல்: 

வீட்டில் உள்ள எதிர்மறை சக்தியை நீக்கி, வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வர, விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டின் பூஜை அறையில் ஒரு விநாயகர் யந்திரத்தை நிறுவ வேண்டும். விநாயகர் சதுர்த்தி நாளிலிருந்து இந்த யந்திரத்தை ஒவ்வொரு நாளும் வழிபட வேண்டும். இது வீட்டில் செல்வத்தை அதிகரிக்கும் என்று ஆழமாக நம்பப்படுகிறது. இது தவிர, முடிந்தவரை வீட்டில் விநாயகர் பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் செய்ய வேண்டும். மேலும், கணபதி மந்திரங்கள், ஸ்லோகங்கள் அல்லது விநாயகர் அஷ்டோத்தர சதனாமாவளி ஓத வேண்டும். இதைச் செய்வது சிறப்பு பலன்களைத் தரும் என்று நம்பப்படுகிறது.

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share