தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மிகவும் அப்செட்டில் இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆரம்பத்தில் டெல்லி தலைமையின் தொடர் எச்சரிக்கையை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. கால்போன போக்கிலேயேசென்று கொண்டிருந்தார். இது இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. இவரது நடவடிக்கையால் அதிமுகவுடன் இனிமே கூட்டணி சேரவே முடியாது.

எதிர்காலம் நமக்கு கேள்விக்குறியாக இருக்கிறது என பாஜக தலைமை கூறியிருக்கிறது. இதனை கேட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா கோபத்தின் உச்சிக்கே சென்றுள்ளார். இறுதி எச்சரிக்கையும் விடுத்துள்ளார். இதனை கொஞ்சமும் எதிர்பாராத அண்ணாமலை நடுநடுங்கி போய் விட்டதாக பாஜகவினர் தெரிவிக்கின்றனர். இந்த கோபத்தை தணிக்க வேண்டுமானால் எடப்பாடி பழனிசாமியுடன் நெருக்கமாக வேண்டும். அவரோடு ஒரு போட்டோ எடுத்து சண்டை இல்லை என டெல்லிக்கு காட்ட வேண்டும் என அண்ணாமலை திட்டம் போட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: வாய் கூசாமல் பொய் சொல்ல வெட்கமா இருக்காதா..? திமுக அமைச்சர்களை கூறுப்போட்ட அண்ணாமலை..!

என்ன காரணத்தை வைத்து சந்திப்பது என்ற கேள்விக்கு மும்மொழி கொள்கைளை வைத்து சந்திக்கலாம் என முடிவு செய்து,ரகசிய தூதும் அனுப்பி இருக்கிறார் அண்ணாமலை.முதல் முயற்சி தோல்வியடைந்த நிலையில், ரெண்டாவது முறையும் தூது விட்டிருக்கிறார்.தலைவர் பட்டியலில் இருக்கும் நான்கு பேரோடு வருகிறோம். அத்தோடு மும்மொழி கொள்கையினால் ஏற்படும் நன்மைகளையும், அண்ணா கூறியது குறித்தும் அவருக்கு எடுத்து சொல்லி புரிய வைப்பேன் எனக்கூறி இருக்கிறார்.

இந்த தகவலை அறிந்த எடப்பாடி பழனிசாமி ரொம்பவே கோபம் அடைந்திருக்கிறார். ''ஏற்கனவே பல்வேறு நெருக்கடியில் இருக்கிறேன்.அண்ணாவை பற்றி தெரிந்துகொள்ள என் கட்சியிலே ஆயிரம்பேர் இருக்கிறார்கள். எதையாவது சொல்ல வேண்டும் என நினைத்தால் இ-மெயிலில் அனுப்பச் சொல்லுங்கள்''என இரண்டாவது முயற்சியையும் புறந்தள்ளி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
என்றாலும் எடப்பாடியாருடன், அண்ணாமலை சேர்ந்து ஒரு போட்டோ எடுத்தே ஆகவேண்டும் என உறுதியாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.
இதையும் படிங்க: மனச விட்டுறாதீங்க அண்ணா..! ஷிகான் ஹுசைனிக்கு ஆறுதல் கூறிய அண்ணாமலை..!