60 ஆயிரம் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு! இந்தியா உட்பட 4 நாடுகளில் ஆட்குறைப்பு செய்ய மைக்ரோசாப்ட் திட்டம்!
மைக்ரோசாப்ட்டின் ஆண்டு அறிக்கையின்படி, 2026 ஜூன் 30 நிலவரப்படி அந்நிறுவனத்தில் உலகளவில் சுமார் 2,23,000 முழுநேர ஊழியர்கள் இருந்தனர். இந்த விருப்ப வெளியேற்றத் திட்டம் அந்த எண்ணிக்கையில் சுமார் கால் பகுதியினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஏஐ தொழில்நுட்பம் அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், எண்ட்ரி லெவல் மற்றும் மிட் லெவல் பணிகளில் முன்னணி ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
ஏற்கனவே அமேசான், ஆரக்கிள் போன்ற நிறுவனங்கள் ஆட்குறைப்பை அறிவித்திருந்தன. இந்நிலையில் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட், சுமார் 60 ஆயிரம் ஊழியர்களுக்கு விருப்ப வெளியேற்றத் திட்டத்தை அறிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முதலீடுகளை அதிகரிக்கவும், செலவுகளைக் கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் உள்ள ஊழியர்கள் இந்தத் திட்டத்திற்குத் தகுதியுடையவர்களாக உள்ளனர். டேட்டா சென்டர்கள், சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அமேசானில் திடீர் பணிநீக்கம்! 1,000 ஊழியர்களுக்கு கல்தா! இந்தியா உள்பட பல நாடுகளில் ஊழியர்கள் பாதிப்பு!
மைக்ரோசாப்ட்டின் ஆண்டு அறிக்கையின்படி, 2026 ஜூன் 30 நிலவரப்படி அந்நிறுவனத்தில் உலகளவில் சுமார் 2,23,000 முழுநேர ஊழியர்கள் இருந்தனர். இந்த விருப்ப வெளியேற்றத் திட்டம் அந்த எண்ணிக்கையில் சுமார் கால் பகுதியினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
திட்டத்தை ஏற்றுக்கொண்டு வெளியேறும் ஊழியர்களுக்கு நிறுவனத்தின் நிலையான பணிநீக்க இழப்பீடு, பங்குகள் தொடர்ந்து கிடைப்பதற்கான வழிமுறைகள் மற்றும் தொழில் மாற்றத்திற்கான உதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள ஊழியர்கள் டிசம்பர் முதல் வாரத்திற்குள் முடிவு செய்ய வேண்டும். திட்டத்தை ஏற்பவர்கள் டிசம்பர் 31 அன்று நிறுவனத்திலிருந்து வெளியேறுவார்கள்.
ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சியால் தொழில்துறையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப நிறுவனங்கள் தங்கள் பணியாளர் எண்ணிக்கையை சரிசெய்து வருகின்றன. மைக்ரோசாப்ட் இந்தத் திட்டத்தின் மூலம் பணியாளர் எண்ணிக்கையைக் குறைத்து, ஏஐ உள்கட்டமைப்பில் அதிக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: அடிபணிந்தது பிரான்ஸ் அரசாங்கம்! வென்றது மாணவர் போராட்டம்! கல்வி முறையில் அதிரடி சீர்திருத்தம் அறிவிப்பு!