×
 
☰

நரேந்திர மோடி மைதானத்தை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்! அகமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இ-மெயில்!

பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மாணவர்கள் முன்கூட்டியே வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளின் 19 வயதுக்குட்பட்டோருக்கான டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் இந்த மிரட்டல் தொடர்பான தகவல் வெளியானது. எனினும், மிரட்டல் வந்த நேரத்தில் போட்டி முடிந்திருந்ததாகவும், இரு அணி வீரர்களும் மைதானத்தில் இருந்து வெளியேறியிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மின்னஞ்சல் மூலம் வந்த மிரட்டலில், நரேந்திர மோடி மைதானத்தில் நவம்பர் 21-ம் தேதி நடைபெற உள்ள பிரபல பாடகர் தில்ஜித் தோசாஞ்சின் இசை நிகழ்ச்சியையும் குறிப்பிட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் கூறினர். தில்ஜித்தின் டெல்லி நிகழ்ச்சியும் நவம்பர் 1-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அந்த நிகழ்ச்சியும் மிரட்டல் மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுமட்டுமின்றி, அகமதாபாத்தில் உள்ள சுமார் 10 தனியார் பள்ளிகளுக்கும் இதேபோன்ற வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டன. தகவல் கிடைத்ததும் போலீசார், வெடிகுண்டு கண்டறியும் மற்றும் செயலிழக்கச் செய்யும் குழுவினர், மோப்ப நாய் படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு குழுக்கள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு விரைந்தனர்.

இதையும் படிங்க: இந்தியாவை குறிவைக்கும் புதிய பயங்கரவாத அலை? இஸ்ரேல் தூதர் விடுத்த அதிர்ச்சி எச்சரிக்கை!

பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மாணவர்கள் முன்கூட்டியே வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

நரேந்திர மோடி மைதானத்திலும் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். மைதானத்தில் இருந்த வீரர்கள் ஏற்கனவே வெளியேறியிருந்ததால், அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதேபோல் மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளிலும் சந்தேகத்துக்கிடமான பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட விரிவான பாதுகாப்பு சோதனைகளின் அடிப்படையில், இந்த மிரட்டல்கள் அனைத்தும் புரளி என அதிகாரிகள் தெரிவித்தனர். மிரட்டல் மின்னஞ்சல்களின் பின்னணியில் யார் உள்ளனர் என்பது குறித்து சைபர் குற்றப்பிரிவு உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் ஆய்வு செய்து வருகின்றன.

ஒரே நேரத்தில் மைதானம், பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு மிரட்டல் வந்ததால் அகமதாபாத்தில் சில மணி நேரம் பதற்றமான சூழல் நிலவியது. ஆனால் பாதுகாப்பு சோதனைகளில் ஆபத்தான பொருட்கள் எதுவும் சிக்காததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: காஷ்மீரில் அதிரடி வேட்டை! பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 5 பேர் கைது! பதுங்கு குழி தகர்ப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share