×
 

ஆரம்பாக்கம் சிறுமி வழக்கில் சிக்கிய பாலியல் கொடூரன்... விடிய விடிய நடந்த விசாரணை - அடுத்தது என்ன?

ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட வடமாநில இளைஞரிடம் காவல்துறையினர் விடிய விடிய விசாரணை. 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் கடந்த 12ஆம் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி மர்ம நபரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமி ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர அளித்து பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரின் சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

குற்றவாளியின் சிசிடிவி புகைப்படங்களை வெளியிட்ட காவல்துறை குற்றவாளி குறித்த தகவல் தெரிந்தால் காவல்துறைக்கு தகவல் அளிக்குமாறு தொலைபேசி எண் விவரங்களை தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி என 4மொழிகளில் போஸ்டராக அச்சிட்டு தேடினர். மேலும் குற்றவாளி குறித்த தகவல் அளிப்பவர்களுக்கு 5லட்ச ரூபாய் சன்மானம் அளிக்கப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் குற்றம் நடந்து 14வது நாளான நேற்று பிற்பகல் ஆந்திர மாநிலம் சூலூர் பேட்டை ரயில் நிலையத்தில் வைத்து குற்றவாளியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து தனிப்படை போலீசார் கைது செய்யப்பட்ட வடமாநில இளைஞரை கவரைப்பேட்டை காவல் நிலையம் அழைத்து வந்தனர். வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் கைது செய்யப்பட்ட நபரிடம் நேரடியாக விசாரணை நடத்தினார்.

இதையும் படிங்க: 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... இளைஞருக்கு போக்ஸோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

முழுமையான விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார் என ஐஜி அஸ்ரா கார்க் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் விடிய விடிய குற்றவாளியிடம் கவரைப்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து குற்றம் நடைபெற்ற ஆரம்பாக்கம் மாந்தோப்பிற்கு அழைத்து சென்று குற்றவாளியிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். அதன் பின்னர் இன்று பிற்பகல் வாக்கில் குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாலியல் ஆசைக்கு இணங்க மறுத்த நந்தினி... ஆபாச பேசி மிரட்டல் விடுத்தல் அதிமுக பிரமுகர் கைது...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share