×
 

மயிலாப்பூரில் 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்: வாட்டர் கேனில் கடத்திய பெண் கைது!

சென்னையில் குடிநீர் கேன்களில் அடைத்து நூதன முறையில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த பெண்ணை மயிலாப்பூர் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

சென்னை மயிலாப்பூர் பகுதியில் சட்டவிரோதமாகக் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, மயிலாப்பூர் தனிப்படை போலீசார் அப்பகுதியில் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, குடிநீர் கேன்களை விநியோகம் செய்வது போலச் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த வனிதா என்ற பெண்ணைப் பிடித்துச் சோதனையிட்டனர். அந்தச் சோதனையில், வாட்டர் கேன்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 20 லிட்டர் கள்ளச்சாராயம் பிடிபட்டது.

இதனையடுத்து வனிதாவைக் கைது செய்த போலீசார், அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல அதிரடித் தகவல்கள் வெளியாகின. இந்தப் பெண் ஆந்திர மாநிலத்திலிருந்து கள்ளச்சாராயத்தைக் கடத்தி வந்து, சென்னையில் ரகசியமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. குறிப்பாக, போலீசாரின் பார்வையில் படாமல் இருக்கத் தண்ணீர் கேன் போடுவது போல நடித்துச் சாராய விநியோகம் செய்துள்ளார். பிடிபட்ட வனிதா ஏற்கனவே சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த வழக்கில் கைதாகி சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ₹32.62 கோடியில் புத்துயிர் பெற்ற சென்னையின் பாரம்பரியம்! – விக்டோரியா ஹாலை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!

இந்தச் சாராய வேட்டை மயிலாப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வனிதாவுக்குப் பின்னால் பெரிய கடத்தல் கும்பல் ஏதேனும் செயல்படுகிறதா? ஆந்திராவிலிருந்து எதன் மூலம் சாராயம் கொண்டு வரப்பட்டது? என்பது குறித்து மயிலாப்பூர் போலீசார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். புத்தாண்டு மற்றும் பண்டிகைக் காலங்களை முன்னிட்டுச் சட்டவிரோத மது மற்றும் சாராய விற்பனையைத் தடுக்கச் சென்னை மாநகரக் காவல் துறை தனது சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 6வது நாளாக தொடரும் போராட்டம்..!! போராட்டக்களத்திற்கு வந்த செவிலியர்கள் குண்டுக்கட்டாக கைது..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share