GST 2.O எதிரொலி... ஆவின் பால் பொருட்கள் விலை குறைப்பு... அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!
மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிக்குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் பால் பொருட்களின் விலையை ஆவின் நிர்வாகம் குறைத்துள்ளது.
இன்று அமலுக்கு வந்துள்ள அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் (GST 2.0) என அழைக்கப்படும் இந்த புதிய சீர்திருத்தங்கள், பிரதமர் நரேந்திர மோடியின் 79வது சுதந்திர தின உரையில் அறிவிக்கப்பட்டவை. இவை பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ஆதரவளிக்கவும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
முந்தைய ஜிஎஸ்டி அமைப்பில் 5%, 12%, 18% மற்றும் 28% என நான்கு முக்கிய வரி அடுக்குகள் இருந்தன. இவை மிகவும் சிக்கலானவை எனக் கருதப்பட்டு, புதிய சீர்திருத்தங்களின் மூலம் இரண்டு முக்கிய அடுக்குகளாக (5% மற்றும் 18%) குறைக்கப்பட்டு உள்ளன. இதனால், 12% அடுக்கில் உள்ள 99% பொருட்கள் 5% அடுக்கிற்கும், 28% அடுக்கில் உள்ள 90% பொருட்கள் 18% அடுக்கிற்கும் மாற்றப்படும். இந்த மாற்றம், பொருட்களின் விலையைக் குறைத்து, பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும்.
மேலும், புகையிலை, பான் மசாலா, சர்க்கரை கலந்த கார்பனேற்றப்பட்ட பானங்கள், ஆடம்பர கார்கள் போன்ற பொருட்கள் மற்றும் ஆடம்பர பொருட்களுக்கு 40% என்ற புதிய வரி அடுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிக்குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் பால் பொருட்களின் விலையைக் குறைத்து ஆவின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. 200 கிராம் பனீர் பாக்கெட் விலை ரூ.120-ல் இருந்து ரூ.110 ஆகவும் 500 கிராம் பனீர் ரூ.300-ல் இருந்து ரூ.275ஆக குறைக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: இன்று முதல் இந்த பொருட்களுக்கு ஜிஎஸ்டி கிடையாது... 375 பொருட்களின் விலைகள் குறையும்.. இதுதான் முழுப் பட்டியல்...!
50 மில்லி லிட்டர் நெய் ரூ.45 என்றும், 5 லிட்டர் நெய் ரூ.3,300, 15 கிலோ நெய் ரூ.10, 900ஆகவும் விலை குறைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு லிட்டர் நெய்யின் 690 ரூபாயிலிருந்து 650 ரூபாயாக விலைக் குறைத்து உள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஜிஎஸ்டி குறைப்பால் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும்.. நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை..!!