விவசாயத்திற்கா? பயங்கரவாதத்திற்கா?... சிறுமலையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி... என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு ஷாக்...!
சிறுமலையில் வெடி விபத்து தொடர்பாக என் ஐ ஏ போலீசார் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு படை (ATS) அதிகாரிகள் சம்பவ இடத்தில் 8 ஜெலிட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமலையில் வெடி விபத்து தொடர்பாக என் ஐ ஏ போலீசார் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு படை (ATS) அதிகாரிகள் சம்பவ இடத்தில் 8 ஜெலிட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து சிறுமலைக்கு செல்லும் மலைப்பாதையில் 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது. இதில் 17வது கொண்டை ஊசி வளைவு அருகே வனத்துறையினரின் கண்காணிப்பதற்காக வாட்ச் டவர் அமைத்துள்ளது. அதன் அருகே துர்நாற்றம் வீசியது. இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று வனத்துறைக்கும் திண்டுக்கல் தாலுகா காவல்நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் சிறுமலை வனத்துறையினர் ஜே.எம்.ஜே என்பவருக்கு சொந்தமான பட்டா காட்டில் துர்நாற்றம் வீசும் பகுதிக்கு சென்று பார்த்த பொழுது மர்மமான முறையில் அழுகிய நிலையில் ஆண் பிணம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த ஆண் இறந்து நான்கு நாட்களுக்கு மேல் ஆனதால் மிகவும் அழுகிய நிலையில் காணப்பட்டது.
இதையும் படிங்க: பயங்கரவாத சதியா?.... சிறுமலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை...!
இறந்த நபரின் அருகே பை ஒன்று இருந்தது பையின் உள்ளே பேட்டரி வயர் மற்றும் வெடிபொருட்கள் இருப்பதை கண்டனர். அதனை கொட்டி பார்த்த பொழுது மர்ம பொருள் வெடித்ததில் மணிகண்டன், கார்த்திக் என இரு காவலர்கள் மற்றும் ஆரோக்கிய செல்வம் என்ற வனத்துறையினருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதையடுத்து காவல்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்தில்வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.இறந்து போன நபர் வைத்திருந்த பையில் இருசக்கர வாகன பேக்டரி மற்றும் 8 ஜெலட்டின் குச்சிகள் வயர் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
 மேலும் வெடிகுண்டு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது  க்யூ ஃபிரான்ஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்  பிரதீப் நேரடியாக சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார்.
போலீசாரின் தீவிர விசாரணையில் இறந்து போன நபர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த சபு என்பதும் இவர் மிளகு வியாபாரம் செய்வது வருவதும் தெரியவந்தது. இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து சிறுமலைக்கு அரசு பேருந்தில் சென்றுள்ளார்.
17வது கொண்டை ஊசி வளைவு அருகே உள்ள வனத்துறையினரால் அமைக்கப்பட்டுள்ள WATCHING TOWER அருகே இறங்கியுள்ளார். பின்னர் வாட்சிங் டவர் அருகே உள்ள ஜே எம் ஜே என்பவருக்கு சொந்தமான பட்டா காட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அங்கே அமர்ந்து மதுபானம் குடித்துள்ளார் மேலும் அவர் தான் கொண்டு வந்த பையில் இருந்து ஜெலட்டின் குச்சி, வெடி மருந்து, பேட்டரி வயர், ஆகியவற்றை எடுத்து மது போதையில் வெளியே எடுத்துள்ளார்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக வெடி வெடித்ததில் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.இது தொடர்பாக போலீசார் கேரள மாநிலம் இடுக்கிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் இன்று 01.03.26 பயங்கரவாத எதிர்ப்பு படை (ATS) மற்றும் க்யூ பிரான்ச் போலீசார் சம்பவம் நடைபெற்ற இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற இடம் மற்றும் தாலுகா காவல் நிலையத்தில் என் ஐ ஏ சோதனை செய்து சென்றுள்ளார். மேலும் சிறுமலைக்கு பேருந்தில் செல்லும்போது அவருடன் இருக்கையில் அமர்ந்து சென்ற சிறுமலையைச் சேர்ந்த நபர் ஒருவரிடமும் என்ஐ ஏ போலிசார் விசாரணை மேற்கொண்டனர்
இறந்து போன நபரின் பையில் ஜெலட்டின் குச்சிகள் பேட்டரி வயர் மற்றும் வெடி பொருட்களை எதற்காக சிறுமலைக்கு கொண்டு வந்தார். விவசாயம் செய்யும் காட்டில் தண்ணீருக்காக கேணிக்கு வெடி வைக்க வெடி பொருட்கள் கொண்டு வரப்பட்டதா அல்லது சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தும் நோக்கத்துடன் வெடி பொருட்கள் கொண்டு வரப்பட்டதா என போலீசார் பல கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்த கேரளா சேர்ந்த சபு ஏற்கனவே சிறுமலையில் உள்ள பட்டா காடுகளை குத்தகைக்கு எடுத்து மிளகு பயிர் செய்து வியாபாரம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாணவி குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர்.. மகளின் கதறலை கேட்டு ஓடி வந்த பெற்றோர்.. அதிர்ச்சி சம்பவம்..!
 by
 by
                                    