நயினாருடன் மோதலா? கட்சி பொறுப்பில் இருந்து விலகிய அண்ணாமலை..! பாஜகவில் பரபரப்பு..!
பாஜகவின் தேர்தல் பொறுப்பில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்து உள்ளார்.
2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பாஜக தேசியத் தலைமை தமிழகத்தில் தனது தேர்தல் வியூகங்களை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு பொறுப்பாளர்களை நியமித்து வருகிறது. பாஜகவின் தமிழக அலுவலகத்தில் முன்னாள் மாநிலத் தலைவராக இருந்த கே. அண்ணாமலைக்கு தேர்தல் தொடர்பான பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்தப் பதவி முழு மாநில அளவிலான தேர்தல் பொறுப்பாளர் அல்ல, மாறாக குறிப்பிட்ட சில சட்டமன்றத் தொகுதிகளுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட ஒரு கள அமைப்புப் பொறுப்பாகும். சிங்காநல்லூர், மதுரை தெற்கு, விருகம்பாக்கம், காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், பத்மநாபபுரம் ஆகிய ஆறு தொகுதிகள் அண்ணாமலைக்கு ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில், கட்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தந்தையின் உடல்நிலையை கருத்தில்கொண்டு பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நயினாரிடம் தனது விலகல் குறித்து கூறியுள்ளதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார். 6 தொகுதிகளுக்கு பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டிருந்த நிலையில் விலகுவதாக அறிவித்து உள்ளது பாஜகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: பலமுறை சொல்லியும் கண்டுக் கொள்ளாத பாஜக..! மீனவ கிராமங்களில் பதற்றம்... செல்வப்பெருந்தைகை எச்சரிக்கை..!
தேர்தலில் போட்டியிடுவது குறித்து காலமும் நேரமும் தான் முடிவு செய்யும் என்றும் கூறினார். இதனால் நயினார் vs அண்ணாமலை என்ற மோதல் நிலவுவதாக கூறப்படுகிறது. அண்ணாமலையை போன்றே பல மூத்த தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் அண்ணாமலைக்கு சம்பந்தமில்லாத தொகுதிகளை ஒதுக்கியதால் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. தந்தையின் உடல்நிலையை காரணம் காட்டி அண்ணாமலை அறிவித்துள்ள நிலையில் நைனார் மீதான அதிருப்தியே காரணம் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இதையும் படிங்க: பொறுமைக்கும் எல்லை உண்டு! அரசுக்கு அண்ணாமலை வார்னிங்! சம வேலைக்கு சம ஊதியம் வாக்குறுதி என்னாச்சு?