×
 

படிச்சவன் செய்யுற காரியமா..? கஞ்சா விற்ற பி.இ பட்டதாரி.. திசைமாறும் இளைய சமுதாயம்..!

சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பி.இ பட்டதாரி, 2 சிறுவர்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

போதைப்பொருள் பழக்கம் மற்றும் போதைப்பொருள் நுகர்வு கலாச்சாரத்தால் இளைய சமூதாயத்தினர் பெருமளவு பாதை மாறி பயணிக்க துவங்கி உள்ளனர். குற்ற சம்பவங்களும் போதைப்பொருள் புழக்கத்தால் அதிகரிக்கத் துவங்கி உள்ளது. இந்நிலையில் படிக்கும் இளைஞர்கள் கையில் போதைபொருள் சென்றுவிட கூடாது என்பதற்காக போலீசார் அதி தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டி வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பி.இ பட்டதாரி கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் காவல் உட்கோட்ட பகுதிகளில் உள்ள தலைவாசல், வீரகனூர், தம்மம்பட்டி,கெங்கவல்லி, மல்லியகரை உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி சீரழிந்து வருவதாகவும், இதனால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தொடர்ந்து புகார்கள் சென்று வந்தது. அதன் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். 

இதையும் படிங்க: இறுமாப்பில் இ.பி.எஸ்..! ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக... செங்கோட்டையனுக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு..?


அப்போது ஆத்தூர் அருகே சந்தனகிரிக்கு செல்லும் பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனத்தின் மூலம் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து கொண்டிருந்த இளைஞரை கையும் களவுமாக போலீசார் பிடித்தனர்.

அவரிடம் போலீசார் விசாரணை செய்ததில், அவர் பெத்தநாயக்கன் பாளையம் கோட்டக்கரை பகுதியை சேர்ந்த கருப்பையா மகன் விஜயவர்மன் [ வயது 34 ] என்பதும் இவர் பி.இ. கம்பியூட்டர் சயின்ஸ் படித்தவர் என்பதும் தெரிந்தது. படித்து முடித்து விட்டு சென்னையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார் விஜயவர்மன். 

பின்னர் வேலையிழந்த விஜயவர்மன் கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்து வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து விஜயவர்மனை கைது செய்த தனிப்படை போலீசார் அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதே போல் கெங்கவல்லி பகுதியில் தனிப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது தெற்கு வீதி பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் பிரவீன்குமார் [ 20 ] என்ற வாலிபரை கைது செய்தனர்.

அவரை பிடித்து விசாரணை செய்ததில் ஆத்தூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் 74கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த 17 வயது சிறுவன், குறும்பர் தெருவை சேர்ந்த ராஜீ மகன் நவதீன் [ 24 ] அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் உள்ளிட்ட நான்கு பேரை பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் 17 வயது சிறுவன் நாமக்கல் பகுதியில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சிறுவனிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நன்றாக படித்த இளைஞர்களும், படிக்கும் வயதில் சிறுவர்களும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான தேர்தல் வழக்கு.. விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்த நீதிமன்றம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share