×
 

சிபிஐ அடுத்த கட்ட நகர்வு... பனையூருக்கு விரையும் அதிகாரிகள்... சூடு பிடிக்கும் விசாரணை...!

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் பனையூருக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கரூர் நகரின் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் பெரும் கூட்டத்தை ஈர்த்தது. ஆனால், இந்த ஆர்வமே துயரத்தின் விதையாக மாறியது. விஜய் மேடையில் பேசத் தொடங்கியதும், கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் வெடித்தது. விஜயின் சுற்றுப் பயணத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

சம்பவம் நடந்த உடனேயே, விஜய் சென்னைக்கு தனி விமானத்தில் திரும்பினார். அது ஒரு தவறான முடிவாகத் தோன்றியது. பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்காமல், போலீஸ் அனுமதி கோராமல் விலகியது அவருக்கு எதிராக கடும் விமர்சனங்களைத் தூண்டியது. விஜய் ஏன் கரூருக்கு வரவில்லை என்ற கேள்வி சமூக வலைதளங்களில், ஊடகங்களில் பரவியது.

கரூர் கூட்ட நெரிசலில் குடும்பங்களை மாமல்லபுரத்தில் நட்சத்திர விடுதியில் தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறினார். கரூர் சம்பவத்தை விசாரிக்க முதலில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனிநபர் ஆணையம் அமைத்தார். இதைத்தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து கரூர் சம்பவத்தை சிபிஐ க்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழுமம் அமைக்கப்பட்டுள்ளது. கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணையில் தொடங்கி உள்ளனர். இதனிடையில் கரூரில் வேலுச்சாமிபுரத்தில் உள்ள வணிகர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு அவர்களிடம் விசாரிக்கப்பட்டது. இந்த நிலையில் நாளை பனையூர் விரையும் சிபிஐ அதிகாரிகள் கரூர் கூட்ட நெரிசல் குறித்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: கரூர் பெருந்துயரம்... விடிந்ததுமே கையில் 3D டிஜிட்டல் ஸ்கேனருடன் களத்தில் இறங்கிய சிபிஐ

சிபிஐ அதிகாரிகள் நாளை பனையூர் சென்று தவெக நிர்வாகிகளிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு சென்று கட்சி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்கள், வியாபாரிகள் என பல்வேறு தரப்பினரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், கட்சி நிர்வாகிகளிடமும் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். 

இதையும் படிங்க: #BREAKING காலையிலேயே விஜய்-க்கு செம்ம ஷாக்... 15 நாட்களுக்கு பிறகு கரூர் வழக்கில் சிபிஐ-ன் அதிரடி மூவ்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share