பல பெண்களுடன் தொடர்பில் இருந்த கணவன்! துண்டு துண்டாக வெட்டி, வீடியோ எடுத்த மனைவி! கள்ளக்காதலன் உடந்தை!
பெரம்பூர் ரயில்வே போலீசாரிடம் இருந்து சென்னை போலீசாருக்கு மாற்றப்பட்டது. ஓட்டேரி போலீசார் கொலை வழக்குப்பதிந்து விசாரித்தனர்.
இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பெரம்பூர் சூட்கேஸ் கொலை வழக்கில், கணவரை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி வீசியதாக அவரது மனைவியும், கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் வெளியான தகவல்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
கடந்த ஜூன் 5ஆம் தேதி சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தின் நான்காவது நடைமேடையில் கேட்பாரற்று கிடந்த சூட்கேஸில், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. கைகள் மற்றும் கால்களின் சில பகுதிகளும் வெட்டப்பட்டிருந்ததால், இது கொடூரமான கொலை என போலீசார் உறுதி செய்தனர். பின்னர் நடைபெற்ற தீவிர விசாரணையில், உயிரிழந்தவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 35 வயதான அமீர் அலி என்பது தெரியவந்தது.
இந்த வழக்கில் அமீர் அலியின் மனைவி ரஹீமா கதூன் மற்றும் அவரது நெருங்கிய தொடர்பில் இருந்த அஸ்ரப் அலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், கணவர் பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததுடன், அடிக்கடி தன்னை தாக்கி துன்புறுத்தியதாக ரஹீமா கூறியுள்ளார். இதன் காரணமாக ஏற்பட்ட மனக்கசப்பு மற்றும் கள்ளக்காதல் உறவு இணைந்து, கணவரை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: காங்., துரோகத்தை தோலுரித்து காட்டுங்க! திமுக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் கொடுத்த டாஸ்க்!
சம்பவத்தன்று கணவருக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்ததாகவும், அவர் மயங்கிய பிறகு அஸ்ரப் அலியை வீட்டிற்கு அழைத்து வந்து இருவரும் சேர்ந்து கழுத்தை அறுத்து கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் உடலை துண்டுகளாக வெட்டி, சில பகுதிகளை கால்வாயில் புதைத்தும், தலை இல்லாத உடலை சூட்கேஸில் அடைத்து பெரம்பூர் ரயில் நிலையத்தில் வீசியும் தப்பியுள்ளனர்.
வழக்கின் முக்கிய திருப்பமாக, கொலைக்குப் பிறகு உடலை துண்டாக்கிய காட்சிகளை ரஹீமா தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவை பலமுறை பார்த்ததாகவும் அவர் கூறியிருப்பதாக போலீஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
சூட்கேஸில் கிடைத்த தடயங்கள், உடையில் இருந்த பார்கோடு, மருத்துவமனை தொடர்பான பொருட்கள், சிசிடிவி காட்சிகள் மற்றும் ஆட்டோ பயண விவரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் போலீசார் குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்தனர். அமீர் அலியின் தலை மற்றும் பிற உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ள நிலையில், இந்த கொலை வழக்கில் மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: அண்ணாமலை ராஜினாமா ஏற்பு! பாஜக தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு! உறுதியானது தனிக்கட்சி