×
 

கோவை சிறுமியை சாக்லெட் கொடுத்து சீரழித்தது அம்பலம்! வெளியானது காம கொடூரர்களின் குற்றப் பின்னணி!

சிறுமிக்கு அடிக்கடி சாக்லெட் வாங்கி கொடுத்து பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டதாக கூறப்படுகிறது.

கோவை: சூலூர் அருகே 5-ம் வகுப்பு மாணவியான 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கொலைக்கு பயன்படுத்திய முறை மிகவும் கொடூரமானது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுமியின் குடும்பம் முதலில் போத்தனூர் நம்பி நகரில் வசித்து வந்தது. சிறுமியின் பெற்றோர் இருவரும் கட்டிடத் தொழிலாளர்கள். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் அவர்கள் சூலூர் பள்ளபாளையம் அருகே உள்ள கிராமத்திற்கு குடிபெயர்ந்தனர். இந்தப் புதிய இடத்தில் அவர்கள் வீட்டுக்கு அருகிலேயே மோகன்ராஜ் என்ற நபர் வசித்து வந்தார். கட்டிடத் தொழிலாளியான கார்த்தி அடிக்கடி மோகன்ராஜின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.

கார்த்தி அந்தப் பகுதியில் சிறுமி விளையாடுவதைப் பார்த்து அவரிடம் பேசத் தொடங்கினார். பின்னர் அவருக்கு அடிக்கடி சாக்லெட் வாங்கிக் கொடுத்து நட்பு ஏற்படுத்திக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். சம்பவம் நடந்த நாளன்று சிறுமியின் தந்தை வேலைக்குச் சென்றிருந்தார். தாயார் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். சிறுமி தன் தம்பியுடன் வீட்டுக்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்தாள்.

இதையும் படிங்க: சிறுமி உடல் மீட்கப்பட்ட ஏரிக்கரையில் ஏடிஜிபி ஆய்வு! துவங்கியது உடற்கூராய்வு பணி! வெளிவரப்போகும் பகீர்!

சிறிது நேரத்தில் அருகில் உள்ள கடைக்குச் செல்லும் போது, அங்கு நின்றிருந்த கார்த்தி சிறுமியிடம் நைசாகப் பேசி, “சாக்லெட் வாங்கித் தருகிறேன்” எனக் கூறி தன் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றார். பின்னர் சிறுமியை கொலை செய்து, உடலை கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள கிணற்றில் வீசியதாகக் கூறப்படுகிறது. இந்த இரு நபர்களும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமியின் உடல் ஏரிக்கரையில் இருந்து மீட்கப்பட்டது. தற்போது உடல் கூராய்வு செய்யப்பட்டு வருகிறது. சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க, “கொடூர குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்” என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மீண்டும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. புதிய பகுதிக்கு குடிபெயர்ந்த குடும்பங்களுக்கு அருகிலுள்ளவர்களை கவனித்தல் அவசியம் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 13 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து சில்மிஷம்!! கார் டிரைவரை பொளந்து கட்டிய மக்கள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share