×
 

'மிளகாய் - எலுமிச்சை கட்டப்பட்ட 'டம்மி பீஸ்'ரஃபேல்..! இந்தியாவின் நெஞ்சில் குத்திய காங்., எம்.பி..!

பொதுமக்களின் இந்த உணர்வுகள் எதிர்கட்சியில் உள்ள பல பெரும் தலைவர்களுக்கு இல்லை என்பதே வருத்தம்.

தமிழ் இலக்கியத்தில், வஞ்சப்புகழ்ச்சி அணி ஒருவரைப் புகழ்வது போல இகழ்வதும், இகழ்வது போல புகழ்வதுமான அணி. எளிமையான வார்த்தைகளில் சொன்னால், ஒருவர் வெளிப்படையாகப் பாராட்டப்படுகிறார். விமர்சிக்கப்படுகிறார், அந்த அர்த்தம் எதிர்மாறாக வெளிப்படும். இந்திய அரசியலிலும் இப்போது இதுவே நடக்கிறது.

பயங்கரவாதத்தின் கோட்டையாக மாறிவிட்ட பாகிஸ்தானுடன் இந்தியா தற்போது போரின் விளிம்பில் உள்ளது. நாட்டு மக்கள், இராணுவத்தின் மன உறுதியை அதிகரிப்பதோடு, அரசுக்கு ஆதரவாக உள்ளனர். னாலும் இங்கு, கிண்டல் அரசியல் தொடர்கிறது. இது நம் சொந்த மார்பை கிழிப்பது போல் தெரிகிறது.

 

எலுமிச்சை, மிளகாய்  கட்டி பொம்மை ரஃபேல் விமானத்தை கையில் ஏந்திய காங்கிரஸ் எம்.பி.,  அஜய் ராய், மோடி அரசை கடுமையாக சாடியுள்ளார். நாடு முழுவது இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளன. பஹல்காம் சம்பவம் குறித்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்குப் பிறகு, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், மத்திய அரசுக்கு ஒவ்வொரு அடியிலும் ஆதரவளிப்பதாகவும் அதனுடன் நிற்பதாகவும் அறிவித்தது. பாகிஸ்தான் அரசு மீதான கயிற்றை இறுக்க அரசு பொருளாதார, ராஜதந்திர முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனால் நாட்டு மக்கள் இதில் திருப்தி அடையவில்லை. இந்த சம்பவத்தைத் திட்டமிட்டவர்களுக்கு அவர்களின் சொந்த மொழியில் பதிலளிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

இதையும் படிங்க: பின்லேடனுக்கு நடந்த சம்பவம்... அமெரிக்காவிடமிருந்து சிக்னல்... பாக்.,ல் குறி வைத்த இந்தியா..!

பொதுமக்களின் இந்த உணர்வுகள் எதிர்கட்சியில் உள்ள பல பெரும் தலைவர்களுக்கு இல்லை என்பதே வருத்தம். பிரதான எதிர்க்கட்சித் தலைவர் இராணுவத்தின் முந்தைய நடவடிக்கைகள், அதன் திறன், அரசின் நோக்கங்களை வெறும் தேர்தல் தந்திரோபாயங்கள் என்று விமர்சிப்பதால் இந்தியாவின் முழு ஆற்றலும் தலைகீழாக மடை மாறிகின்றன. 

உத்தரப்பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் ஒரு பேட்டியின்போது, '' ஒரு பிளாஸ்டிக் விமானம், அதில் ரஃபேல் என எழுதப்பட்டு, எலுமிச்சை-மிளகாயை ஒரு நூலில் கட்டி இந்திய ராணுவத்தை கடுமையாக கிண்டல் செய்து, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இளைஞர்கள் தியாகிகளானார்கள் என்று கூறியுள்ளார். ''இந்திய அரசு பயங்கரவாதிகளை நசுக்கும் என்று கூறுகிறது. பிரான்சிலிருந்து ரஃபேலையும் கொண்டு வந்துள்ளனர். ஆனால் அதில் எலுமிச்சை, மிளகாய் கட்டப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள், அவர்களின் உதவியாளர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்?'' எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர்,  பொம்மை விமானத்தை கையில் ஏந்தி பிரதமர் மோடி முன்பக்கத்திலும், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பின்னால் அமர்ந்திருப்பதாகவும் நகைச்சுவையாகக் கூறுகிறார் அஜய் ராய்.

அஜய் ராயின் இந்த வீடியோவும், பேச்சும் பாகிஸ்தான் ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்படுகிறது. பாகிஸ்தானின் செய்தி சேனல் ஏஆர்ஒய் செய்தி தொகுப்பாளர், ரஃபேல் ஹேங்கரில் எலுமிச்சை, மிளகாய் கட்டப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளதாக இந்தியத் தலைவரே கூறுவதாகக் பாகிஸ்தானுக்கு வலுச் சேர்த்துள்ளார். 
 

இதையும் படிங்க: மனச்சோர்வை உண்டாக்காதீர்கள்..! பகல்காம் வழக்கை விசாரிக்க மறுத்தது உச்சநீதிமன்றம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share