கோவையில் ஒரு குன்றத்தூர் அபிராமி... கள்ள உறவுக்கு தடையாக இருந்த குழந்தையை கொன்ற கொடூர தாய்...!
கள்ள தொடர்புக்கு தடையாக இருந்ததாக குழந்தையை, மிருக குணம் படைத்தாயே கழுத்தை நெறித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பையும் வேதனையையும் ஏற்படுத்தியிருக்கின்றன.
தகாத உறவுக்கு தடையாக இருந்ததாக இரு குழந்தைகளை பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து கொன்ற கொடூர பெண் அபிராமி, அபிராமியின் கள்ளக்காதலன் இருவருக்கும் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து வழங்கப்பட்ட தீர்ப்பின் பரபரப்பு தனியும் முன்பே, கோவையில் ஒரு பெண் கள்ள காதலுக்கு இடையூறாக இருந்ததாக, தன் குழந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை இருகூர் பகுதியில் வசிக்கும் ரகுபதியை காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண் தமிழரசி. ரகுபதிக்கும் தமிழரசிக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளது. மது பழக்கத்தில் இருந்த ரகுபதிக்கும் தமிழரசிக்கும் அவ்வப்போது சண்டை வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையிலே, தமிழரசியின் தகாத நடத்தையை அறிந்த ரகுபதி தமிழரசியை கணித்திருக்கின்றார். சிறு சண்டைக்கு கோபித்துக் கொண்டு தாயார் வீட்டுக்கு தமிழரசி செல்வதை வாடிக்கையாக வைத்திருந்த தமிழரசி, நடத்தையை கண்டித்ததனால் கணவனை பிரிந்து தனியாக குடியேறியுள்ளார்.
தமிழரசியின் நடத்தையை அறிந்த தந்தை வழி குடும்பத்தாரும், தமிழரசியை தள்ளி வைத்தனர். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட தமிழரசி, வசந்த் என்ற கள்ள காதலுடன் தொடர்ந்து தகாத உறவில் இருந்து வந்துள்ளார். இதனை ரகுபதி கண்டித்தபோது, கள்ள காதலன் வசந்தை ஏவி விட்டு அடிப்பேன் என தமிழரசி மிரட்டியதாக கூறப்படுகிறது. யார் சொல்வதையும் பொருட்படுத்தாத தமிழரசி, கள்ள காதலன் சொல்வதை கேட்டு நடந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சுடுகாட்டில் அந்த மாதிரி.. மஞ்ச காட்டு மைனாவுடன் வசமாக சிக்கிய பிரபல கட்சி நிர்வாகி..!
இந்நிலையில், ரகுபதி மற்றும் தமிழரசிக்கு பிறந்த பெண் குழந்தை அபர்ணா ஸ்ரீ (4), தாய் மாமன் வீட்டின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன், வெளி வேலையாக செல்ல இருந்ததனால், குழந்தையை சிறிது நேரம் பார்த்துக்கொள் என தமிழரசியிடம் குடும்பத்தார் ஒப்படைத்திருக்கின்றனர். பின்னர், சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு அழைத்து பேசிய தமிழரசி, குழந்தை விளையாடிக்கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து இறந்தாக குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பெண் குழந்தையின் தந்தை ரகுபதிக்கும் தகவல் தந்தனர். தகவல் அறிந்து மனமுடைந்த ரகுபதி குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் தந்தார். இயற்கைக்கு மாறான மரணம் என சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். உடற்கூறு ஆய்வில் குழந்தை கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டதை போலீசார் அறிந்தனர்.
காவல்துறையின் தீவிர விசாரணையில், கள்ள தொடர்புக்கு குழந்தை தடையாக இருந்ததனால் குழந்தையை கொன்றுவிட்டதாகவும், கள்ள காதலன் குழந்தையில்லாமல் இருந்தால் கல்யாணம் செய்துகொள்ளலாம் என்று சொன்னதால் குழந்தையை கொன்றாகவும் போலீசில் வாக்குமூலம் தந்ததாக கூறப்படுகிறது.
குழந்தைகை கொன்றுவிட்டு மயங்கி குழந்தை இறந்தாக நாடகமாடிய தமிழரசியை பிடித்த போலீசார் கள்ள காதலன் வசந்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: நம்ப போயிடலாம் தங்கம்.. குடும்ப தகராறில் ஒன்றரை வயது குழந்தையை கொன்று தாயும் தற்கொலை.. ஈரோட்டில் சோகம்!