தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி துருக்கியில் கைது!! இந்தியாவுக்கு நாடு கடத்தல்!
போதைப்பொருள் வழக்கில் தேடப்பட்டு வந்த தாதா தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளியான சலீம் டோலா,59, இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டான்.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த, பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளியான சலீம் டோலா (59) இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் முக்கிய புள்ளியாகக் கருதப்படும் சலீம் டோலா மீது இந்தியாவில் மட்டும் 10 வழக்குகள் உள்ளன. குறிப்பாக, மகாராஷ்டிராவின் சாங்கிலி மாவட்டத்தில் பிடிபட்ட ரூ.252 கோடி மதிப்பிலான மெபெட்ரான் (MD) போதைப்பொருள் வழக்கில் இவர் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படுகிறார்.
பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் தாவூத் இப்ராஹிமுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்த இவர், மத்திய புலனாய்வு அமைப்பின் (CBI) கோரிக்கையின் பேரில் இன்டர்போல் ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் வெளியிட்டிருந்தது.
இதையும் படிங்க: Google நிறுவனத்தின் 1 GW Data Centre..! அடிக்கல் நாட்டிய சந்திரபாபு நாயுடு..!
சில தினங்களுக்கு முன் துருக்கிய தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில் சலீம் டோலா பிடிபட்டார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசின் உதவியுடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் மத்திய அரசு முயற்சி எடுத்ததன் விளைவாக, இன்று காலை சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டார்.
தற்போது உளவுத்துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் சலீம் டோலா, விரைவில் விசாரணைக்காக மும்பை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளார். கடந்த ஆண்டு அவரது மகன் தாஹிர் டோலா மற்றும் உதவியாளர் சலீம் முகமது சோஹைல் ஷேக் ஆகியோரும் துபாயில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சலீம் டோலாவின் நாடு கடத்தல், இந்தியாவின் சர்வதேச குற்றவாளிகளை திரும்பப் பெறும் முயற்சிகளில் மற்றொரு முக்கிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. தாவூத் இப்ராஹிம் உள்ளிட்ட பெரிய மட்ட குற்றவாளிகளை நாடு கடத்தும் நடவடிக்கைகள் தொடரும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம், போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க்குகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இந்தியா - நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!! ஜவுளி, விவசாயம், இறைச்சி ஏற்றுமதி என் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்!