நைட்டு ரூமுக்கு வா! இல்லையினா படிப்பு அம்போ! மாணவிகளை மிரட்டிய வில்லங்க சாமியார்! சிக்கியது எப்படி?
படிப்பு உட்பட பல்வேறு விஷயங்களை காரணம் காட்டி மாணவியரை மிரட்டி, டில்லி சாமியார் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது, விமானப்படை அதிகாரி ஒருவரின் கடிதத்தின் வாயிலாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
டில்லி வசந்த் கஞ்ச் பகுதியில் உள்ள ஸ்ரீ சாரதா இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மேனேஜ்மென்ட் கல்லூரியில், மேலாளராக இருந்த சைதன்யானந்த சரஸ்வதி சாமியார், 17 மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கடுமையான புகார்கள் எழுந்துள்ளன.
கர்நாடகாவின் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் கீழ் இயங்கும் இந்த நிறுவனத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவிகள் உயர்கல்வி பயில்கின்றனர். பலர் விமானப்படை அதிகாரிகளின் பிள்ளைகளாகவும், பொருளாதார ரீதியாக பின்தங்கியோராகவும் உள்ளனர்.
எப்.ஐ.ஆர்.யின்படி, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், ஒரு முன்னாள் மாணவியின் கடிதமும், விமானப்படை குரூப் கேப்டன் ஒருவரின் மின்னஞ்சலும், சாமியாரின் கொடுமைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தன.
இதையும் படிங்க: லேடீஸ் ஹாஸ்டலில் ரகசிய கேமிரா! பாலியல் தொல்லை! டெல்லி போலி சாமியாரின் காம லீலைகள் அம்பலம்!
இதைத் தொடர்ந்து, ஸ்ரீ சாரதா பீடத்தினர் கல்லூரிக்குச் சென்று 30க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். இதில், இரவு நேரங்களில் சாமியார் மாணவிகளைத் தன் அறைக்கு அழைத்து துன்புறுத்தியது, மறுத்தால் கல்வியை சீர்குலைத்ததும் உறுதியானது. வெளிநாடு பயணங்களின்போது மாணவிகளை மிரட்டி அழைத்துச் சென்றதும் தெரியவந்தது.
போலீசார் சோதனையில், சாமியாரின் ஆபாச செய்திகள், படங்கள், வாட்ஸ்அப் சாட்கள் உள்ளிட்ட ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டன. 32 மாணவிகளிடம் விசாரணை நடத்தி, 17 பேரிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.
இந்த 16 ஆண்டுகளாக நடந்த துன்புறுத்தல்களுக்கு, கல்லூரி துணை முதல்வர் ஸ்வேதா உட்பட மூன்று பெண் ஊழியர்கள் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்கள் மாணவிகளை மிரட்டி சாமியாருக்கு உதவியதாகப் புகார் பெறப்பட்டுள்ளது.
இதையடுத்து, வசந்த் கஞ்ச் போலீஸ் நிலையத்தில் பாலியல் துன்புறுத்தல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாமியார் இரண்டு மாதங்களுக்கு முன் தலைமறைவானார். போலீசு அவரது சொத்துகள், வங்கிக் கணக்குகள் ஆகியவற்றைத் தணிக்கை செய்து வருகின்றனர். அவரது புதிய கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. டில்லி போலீசு தீவிர தேடல் நடத்தி வருகிறது.
ஸ்ரீ சாரதா பீடம், சாமியாரை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கியுள்ளது. "அவரது செயல்கள் தவறானவை. கல்லூரி அரசு கீழ் இயங்குவதால், மாணவிகளும் பெற்றோரும் படிப்பு குறித்து கவலைப்பட வேண்டாம்" என அறிக்கை வெளியிட்டுள்ளது. கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த சம்பவம், உயர்கல்வி நிறுவனங்களில் பெண்களின் பாதுகாப்பைப் பற்றி புதிய விவாதங்களைத் தூண்டியுள்ளது. போலீசு மேலும் தகவல்களைத் தேடி வருகிறது.
இதையும் படிங்க: ஸ்காலர்ஷிப்பில் படிக்கும் மாணவிகளிடம் சில்மிஷம்!! ஆபாச மெசேஜ்! அத்துமீறிய போலி சாமியார் தலைமறைவு!