டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம்!! பாகிஸ்தானுக்கு ஆதரவாக பதிவு!! திருப்பூரில் வங்கதேசத்தினர் 6 பேர் கைது!
பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக பதிவிட்ட வங்கதேசத்தவர் 6 பேரை இன்று டெல்லி போலீசார் கைது செய்தனர்.
டெல்லி போலீசார் தமிழகத்தில் பெரும் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 2025 டிசம்பர் 13ஆம் தேதி டில்லி செங்கோட்டையில் நடந்த பயங்கரவாத குண்டுவெடிப்பு சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டவர்களை தேடி வருகின்றனர். அந்த விசாரணையில், திருப்பூரில் வசித்து வரும் வங்கதேச நாட்டவர்கள் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக பதிவுகள் செய்திருப்பது தெரியவந்தது.
டெல்லி போலீசார் திருப்பூருக்கு சிறப்பு குழுவை அனுப்பி, ஊத்துக்குளி, பல்லடம், திருமுருகன்பூண்டி பகுதிகளில் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பதுங்கியிருந்த 6 வங்கதேச நாட்டவர்களை கைது செய்தனர். ஊத்துக்குளியில் 2 பேர், பல்லடத்தில் 3 பேர், திருமுருகன்பூண்டியில் ஒருவர் என மொத்தம் 6 பேரை கைது செய்து டில்லிக்கு அழைத்துச் சென்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள் செங்கோட்டை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவுகள் செய்தது மட்டுமின்றி, பயங்கரவாதிகளுக்கு உளவு தகவல்கள் அளித்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் போலி ஆவணங்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: ஒரு கோடி ரூபாய் செலவில் மருது சகோதரர்களுக்கு சிலை... திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்..!!
கைது செய்யப்பட்ட 6 பேரிடமிருந்து 8 செல்போன்கள், 16 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த செல்போன்கள் மூலம் பல்வேறு சமூக வலைதள குழுக்களில் பயங்கரவாத ஆதரவு பதிவுகள் செய்திருப்பது உறுதியாகியுள்ளது. மேலும், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருந்ததற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன.
டெல்லி போலீசார் இவர்களை டில்லிக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகத்தில் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் பயங்கரவாத ஆதரவு நெட்வொர்க் குறித்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் வங்கதேச நாட்டவர்கள் அதிக அளவில் இருப்பதால், போலீசார் மேலும் தீவிர சோதனைகளை மேற்கொள்ள உள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை தேசிய பாதுகாப்புக்கு மிக முக்கியமானது என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கில் இன்னும் பலர் தொடர்புடையிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: AI மாநாட்டு பகுதியில் மேலாடையின்றி போராட்டம்..!! 4 காங்கிரஸ் தலைவர்கள் கைது..!! கோர்ட்டில் ஆஜர்..!!