×
 

“இபிஎஸுக்கு கார் மாறுவதும், கால் மாறுவதும் புதிது அல்ல” - உதயநிதி ஸ்டாலின் சாடல்...!

இந்தியாவில் ஒன்றிய பாஜக அரசை துணிச்சலுடன் கேள்வி கேட்கும் ஒரே தலைவர் மு.க ஸ்டாலின் மட்டுமே. 

சாத்தூரில் நடைபெறும் திமுக கட்சி நிர்வாகிகளுடன் ஆன ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். 

அப்போது பேசிய அவர், 75 ஆண்டுகளாகியும் திமுக இளமையோடும், வலிமையாக இருப்பதற்கு காரணம் கலைஞரின் உடன்பிறப்புகளாகிய கட்சி நிர்வாகிகளே. 75 வருடங்களில் எத்தனையோ சவால்கள், போராட்டம், துரோகங்கள் ஆகியவற்றை கண்டுள்ளோம். பெரிய பெரிய எதிரிகள் எல்லாம் பார்த்துள்ளோம்.

நாட்டின் முடிசூடா மன்னன் ஜவகர்லால் நேரு, பக்தவத்சலம் போன்ற தலைவர்களுடன் சண்டை போட்டு பல சவால்களை சந்தித்த இயக்கம் திமுக தலைவர் முக.ஸ்டாலினுக்கு நிகரான எதிரிகள் தமிழக அரசியல் களத்தில் இல்லை.

இதையும் படிங்க: பரபரப்பு அரசியல் களம்! சுற்றுப்பயணத்தை தொடங்கும் உதயநிதி... திமுகவினர் குஷி

இந்தியாவில் ஒன்றிய பாஜக அரசை துணிச்சலுடன் கேள்வி கேட்கும் ஒரே தலைவர் மு.க ஸ்டாலின் மட்டுமே. திமுகவை யாரும் தொட்டு கூட யாரும் பார்க்க முடியாது. ஒரு சில மாதங்களில் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும். 

தமிழகத்தின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் ஒன்றிய அரசு தொடர்ச்சியாக தினமும் கொடுத்துகிட்டே இருக்கிறோம் நெருக்கடியை கொடுத்து வருகிறார்கள். மொழி உரிமை, மாநில உரிமை பறிக்கும் முயற்சியை பாஜக ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகின்றது

திமுகவை தோற்கடித்து தமிழகத்தை கைப்பற்ற பாஜக ஒன்றிய அரசு முயற்சி செய்து வருகிறது.  ஒன்றிய அரசு செய்யும் சூழ்ச்சி அனைத்தையும் முதல்வர் இடது கையில் கையாண்டு  வருகிறார். எடப்பாடி பழனிச்சாமிக்கு கார் மாறுவதும், கால் மாறுவதும் புதிது கிடையாது.  முகத்தை துடைக்கும் அளவிற்கு என்ன பேச்சு வார்த்தை நடந்தது. வடிவேலு காமெடி போல் பேக்கரி டீலிங் நடந்து இருக்கலாம். 

எடப்பாடி பழனிச்சாமி நடத்தும் பிரச்சார பயண கூட்டம் நாள்தோறும் குறைந்து கொண்டே செல்கிறது. எடப்பாடி பழனிச்சாமி தனது பிரச்சாரத்தை முடிக்கும் போது அவரும் அவரது ஓட்டுநர் மட்டுமே இருப்பார்கள். எடப்பாடி பழனிச்சாமி ஆம்புலன்ஸை கண்டாலே கோபப்படுகிறார். எடப்பாடி பழனிச்சாமிக்கு  என் மீது கோபப்படுவதே வேலை  என சரமாரியாக விமர்சித்தார். 

 

இதையும் படிங்க: பொய் செய்தி பரப்புறதுதான் பாசிச கும்பலின் முழு நேர வேலை! விளாசிய உதயநிதி

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share