ரூ.1000 கோடி மோசடி... கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய காவல்துறை... கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி...!
இன்று பொதுமக்கள் முன்னிலையில் கழிவறை தொட்டி திறக்கப்பட்டு அதில் சோதனை இடப்பட்டது.
நத்தம் அருகே பண இரட்டிப்பு மோசடியில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் முன்னிலையில் கழிவுநீர் தொட்டி திறந்து பார்க்கப்பட்டது. கட்டிய பணம் திரும்ப கிடைக்குமா கிடைக்காதா...? பணம் திரும்ப கிடைக்கவில்லை என்றால் எங்களுக்கு சாவதை தவிர வேறு வழியில்லை என பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீருடன் பேட்டி.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காசம்பட்டியில் எஸ்யூ எல் ஆப் மூலம் பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் பணத்தை சுருட்டிய சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ், அனிதா, விஜய் ஆகிய மூவரும் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.
பண மோசடி சம்பவம் நத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பண மோசடியில் ஈடுபட்ட விஜய் என்பவர் புதிதாக கழிவறை தொட்டி அமைத்திருப்பதாகவும் அதற்குள் பணத்தை பதுக்கி இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போலீசாரிடம் சந்தேகத்தை எழுப்பினர். இதை அடுத்து இன்று பொதுமக்கள் முன்னிலையில் கழிவறை தொட்டி திறக்கப்பட்டு அதில் சோதனை இடப்பட்டது. அந்தத் தொட்டியில் பணம் ஏதும் கிடைக்காததை உறுதி செய்த காவல்துறையினர் மேலும் பொதுமக்கள் இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என பொதுமக்கள் மத்தியில் பேசினர்.
இதையும் படிங்க: பள்ளி குடிநீர் தொட்டியில் மலம்...? - திண்டுக்கல்லை அதிர விட்ட சம்பவம்... அதிர்ச்சி கொடுத்த துண்டுசீட்டு...!
பாதிக்கப்பட்ட மக்கள் நாங்கள் செலுத்திய இலட்சக்கணக்கான பணம் எங்களுக்கு கிடைக்குமா கிடைக்காதா என புலம்புகின்றனர் மேலும் இந்த பணம் எங்களுக்கு மீண்டும் கிடைக்கவில்லை என்றால் நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்வதை தவிர வேறு வழி இல்லை என பொதுமக்கள் கண்ணீருடன் பேட்டி அளித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: மீண்டும் நிர்பயா!! டெல்லியில் ஓடும் பஸ்சில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! டிரைவர், உதவியாளர் கைது!