திமுக கூட்டணிக்கு ஓ.கே. சொன்ன பிரேமலதா?... உதாசீனப்படுத்திய எடப்பாடி வேண்டாம்...மொத்தமாக மாறிய களம்...!
கடந்த முறை மக்களவை தேர்தலில் விருதுநகர் தேர்தலில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் தோல்வியடைய அதிமுகவினர் சரிவர ஒத்துழைப்பு அளிக்காததும், உள்ளடி வேலைகள் பார்த்ததுமே காரணமாக கருதப்படுகிறது.
தமிழகத்தில காலியாக இருக்கக்கூடிய ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது, திமுகவிடம் நான்கு இடங்கள், ஆதிமுகாவில இரண்டு இடங்கள் உள்ளன. மேலும் சட்டமன்ற தேர்தல் நடைபெறக்கூடிய இத்தருணத்தில் மாநிலங்களவை தேர்தலுக்கான ஆறு இடங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை தங்களுக்கு மிகவும் முக்கியமான கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சியை கருதுகிறார்கள்.
தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவிற்கு, மாநிலங்களவையில் ஒரு சீட் கொடுப்பதாக பாஜக வாக்கு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் வட தமிழகத்தில் திமுகவுக்கு போட்டியான முக்கிய தலைவராக அன்புமணி ராமதாஸ் கருதப்படுகிறார். எனவே வடதமிழகம் சார்ந்த சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற பாமக கூட்டணி மிக முக்கியமானது. இதனால் தான் அதிமுக தன்னிடம் உள்ள இரண்டு ராஜ்யசபா சீட்டுகளில் கூட ஒன்றை அன்புமணி ராமதாஸுக்கு விட்டுக்கொடுக்க முடிவெடுத்துள்ளது.
ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக மாநிலங்களவை சீட் விவகாரத்தில் அதிமுக தங்களை உதாசீனப்படுத்திவிட்டதாக கோபத்தில் உள்ளது. இரண்டு சீட்டுகளில் ஒன்றை பாமகவிற்கு கொடுக்கவுள்ளதால், மற்றொன்றை நிச்சயம் எடப்பாடி பழனிசாமி அதிமுகவிற்கு தான் ஒதுக்குவார் என்பது உறுதியாகியுள்ளது. இதனால் தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் கிடைக்காது. தனது மகன் விஜய பிரபாகரனை எப்படியாவது எம்.பி. ஆக்கிவிட வேண்டும் என்ற எண்ணம் பிரேமலதா விஜயகாந்திற்கு இருக்கிறது. கடந்த முறை மக்களவை தேர்தலில் விருதுநகர் தேர்தலில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் தோல்வியடைய அதிமுகவினர் சரிவர ஒத்துழைப்பு அளிக்காததும், உள்ளடி வேலைகள் பார்த்ததுமே காரணமாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க: “அதெல்லாம் ஒரு கட்சினு.. பெரிய கட்சி பத்தி பேசுங்க ...” - தேமுதிகவை தெறிக்கவிட்ட திமுக அமைச்சர்...!
மறுபுறம் திமுகவிடம் உள்ள 6 ராஜ்யசபா சீட்களில் ஒன்றை தேமுதிகவிற்கு கொடுக்க தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தங்களது கூட்டணிக்குள் வந்தால் கூடுதல் பலத்த 50 விழுக்காடு வாக்குகளை கொண்ட ஒரு அணியாக மாறும், திராவிட முன்னேற்ற கழகத்தின் வெற்றி விகிதம் ஸ்ட்ரைக்கிங் ரேட் கூடும் என்ற அடிப்படையில் கூடும் என எதிர்பார்க்கிறார்களாம். ஆனால் தேமுதிகவை கடந்த முறை உதாசீனப்படுத்திய எடப்பாடி பழனிசாமி பாஜகவைக் கடந்து பாமகவிற்கு முக்கியத்துவம் தந்தார். மேலும் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து வரும் தேமுதிகவிற்கு மீண்டும் அதிமுக கூட்டணியில் இணைவது தோல்வியாகவே அமையக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இதனால் வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள திமுக கூட்டணிக்கு பிரேமலதா விஜயகாந்த் ஓ.கே. சொல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு ..! கூட்டணியே அறிவிக்காத நிலையில் பிரேமலதா தகவல்..!