டார்ச் லைட் வேணாம்! உதயசூரியன்லயே நில்லுங்க! கமலிடம் கறார் காட்டும் திமுக! தொகுதி எண்ணிக்கையும் குறைவு!
திமுக கூட்டணியில் நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இரண்டு தொகுதிகளை ஒதுக்குவதாகவும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் எனவும் தி.மு.க., அறிவுறுத்தி உள்ளது.
தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ள நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் (ம.நீ.ம.) கட்சிக்கும் 2 தொகுதிகளே ஒதுக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது. மேலும், அந்த இரு தொகுதிகளிலும் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று தி.மு.க. தரப்பில் கறாராக நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் ம.நீ.ம. பொதுச்செயலர் அருணாச்சலம் தலைமையிலான குழு பங்கேற்றது. அப்போது தி.மு.க. தரப்பு, “இரண்டு தொகுதிகளுக்கு மேல் தர முடியாது. உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும்” என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த ம.நீ.ம. பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு வெளியேறினர்.
ம.நீ.ம. கட்சி, தனக்கென ஒதுக்கப்பட்ட ‘டார்ச் லைட்’ சின்னத்திலேயே போட்டியிட விரும்புகிறது. கடந்த தேர்தல்களில் அந்த சின்னத்தில் 4 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளதாகக் கூறும் கட்சி, அதை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை.
இதையும் படிங்க: இது நம்ம லிஸ்டல்யே இல்லையே! ஸ்டாலினை ஒரேடியாக புகழும் கமல்.! காங்., நிர்வாகிகள் அதிர்ச்சி!
இந்த விவகாரம் கமல்ஹாசனுக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர் உடனடியாக கட்சியின் அவசர நிர்வாகக் குழு கூட்டத்துக்கு உத்தரவிட்டார். இன்று மாலை சென்னை அண்ணா நகரில் உள்ள சாம்கோ ஹோட்டலில் இந்த முக்கிய கூட்டம் நடைபெற உள்ளது. இதில், தி.மு.க. விதித்த நிபந்தனையை ஏற்பதா அல்லது மாற்று முடிவு எடுப்பதா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹைதராபாத் செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்த கமல்ஹாசன், “தி.மு.க.வுடன் பேச்சு நடந்து வருகிறது. வெற்றியை எதிர்பார்க்கிறோம். அரசியல் பேச்சுக்கு ஹைதராபாத் நிகழ்ச்சிக்குப் பிறகு வருகிறேன்” என்று கூறினார்.
தி.மு.க. கூட்டணியில் கமலின் கட்சிக்கு 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையும் ம.நீ.ம.வுக்குள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலின், கமல், விஜய் வீட்டுக்கு சிக்கல்! ஈ.சி.ஆரில் விதிமீறல் கட்டிடங்களா? ஐகோர்ட் அதிரடி உத்தரவு!