×
 

அச்சச்சோ... எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்திற்கு இப்படியொரு இடைஞ்சலா? - மடமடன்னு நடையைக் கட்டிட்டாரே...!

நெல்லையில் திடீர் மழையால் கலைந்த எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரம் பாதியில் நின்று போனது 

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்த நிலையில் இன்று நெல்லை டவுன் பகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். 

அப்போது திடீரென மழை பெய்தது. கொட்டும் மழையிலும் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்  பிரச்சார வாகனத்தில் நின்றபடி மலையில் நனைந்து பொதுமக்கள் மத்தியில் பேசினர். 

எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் பேசியதாவது, மழை அதிகமாக கொட்டுகிறது.  கொட்டும் மழையில் மக்கள் வெள்ளத்தை பார்க்கும் போது நெல்லை தொகுதியில் வெற்றி பெற்று விட்டோம். மக்கள் அதிமுக பக்கம் இருக்கிறார்கள். 

இதையும் படிங்க: களமாட காத்திருக்கும் பாஜக.. நயினாரின் சூறாவளி சுற்றுப்பயணம்! பாஜக தொண்டர்கள் செம குஷி..!

நெல்லை சீமை புண்ணியமான இடம். வ உ சிதம்பரனாருக்கு அதிமுக ஆட்சியில் மணிமண்டபம் கட்டப்பட்டது. நான் முதல்வராக இருந்த போது சட்டமன்ற வளாகத்தில் வ உ சிதம்பரனார் திருவுருவப்படத்தை திறந்து வைத்தேன். 

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது. இன்று திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு அறிக்கை விடுகிறார். b அதில் நீட் தேர்வு அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டதாக கூறுகிறார்.

அது முற்றிலும் தவறு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் திமுக கூட்டணி அங்கம் வகித்த போது தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. அதிமுக மக்களுக்கு என்ன தேவையோ அதைத்தான் நிறைவேற்றுகிறது. தற்போது நாட்டில் விலைவாசி உயர்வு அதிகரித்துள்ளது. 

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்களை திமுக அரசு நிறுத்தி வைத்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்று கூறினார். அந்த நேரத்தில் மழை கூடுதலாக பெய்ததால் பிரச்சாரத்தை எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக முடித்துவிட்டு புறப்பட்டு சென்றார். 

இதையும் படிங்க: அதிமுக ஆட்சி வந்ததும் சரவெடி தான்! 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம்.. வாக்குறுதியை அள்ளி வீசிய இபிஎஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share