×
 

#BREAKING பரபரக்கும் அரசியல் களம்... டெல்லியில் அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு...!

இப்படிப்பட்ட சூழ்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை சந்தித்திருப்பது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி வந்திருப்பது அதிமுகவினர் இடையே ஒரு பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கின்றது. குறிப்பாக தமிழகத்தில் நிலவக்கூடிய அதிமுகவினுடைய பிரச்சனைகள் இறுதியாக வந்து முடியக்கூடிய இடம் டெல்லியில் என்கின்ற அளவுக்கு தற்பொழுது மாறி இருப்பதாக அதிமுக தரப்பிலேயே பேசப்படுகின்றது. அதுபோன்ற ஒரு சூழ்நிலையில் தான் டெல்லி சென்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமித் ஷாவை சந்தித்துள்ளார். 

டெல்லியில் உள்ள அமித் ஷாவின் இல்லத்திற்கு சென்றிருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி, கூட்டணிக்குள் நிலவும் பிரச்சனைகள், செங்கோட்டையன் விவகாரம், ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவை கட்சிக்குள் இணைப்பது, முதலமைச்சர் வேட்பாளராக தன்னை அறிவிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதிமுகவுக்குள் உட்கட்சி பிரச்சனையானது மிகப்பெரிய அளவில் வெடிக்க தொடங்கி இருக்கின்றது.  அதன் காரணமாகத்தான் தற்பொழுது தொடர்ந்து பல சந்திப்புகளானது நடைபெற்றுக் கொண்டிருப்பதை நாம் காண முடிகின்றது. கூட்டணி பிரச்சனைகளை தீர்த்து வைக்கக்கூடிய ஒரு நோக்கத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆதிமுகாவினுடைய பங்கை மீண்டும் உறுதிப்படுத்துவது தொடர்பாகவும் தான் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி... அமித் ஷாவிற்கு நோ சொல்லப்போகிறாரா? - பரபரக்கும் அரசியல் களம்...!

அமித் ஷாவை சில தினங்களுக்கு முன்பு தான் செங்கோட்டையன் சந்தித்தார். ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்க வேண்டும் என்றும், அப்போது தான் வர உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியும் என அமித் ஷாவிடம் செங்கோட்டையன் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மற்றொருபுறம் டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க முடியாது எனக்கூறி தேசிய ஜனநாயக்கூட்டணியில் இருந்து வெளியேறியிருக்கிறார். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை சந்தித்திருப்பது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது 
 

இதையும் படிங்க: 4 வருஷமா எங்க காணாமல் போனீங்க?... எடப்பாடி பழனிசாமியை டாரு டாராக கிழித்த கனிமொழி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share