சேலத்தில் முதிய தம்பதி படுகொலை.. தொடர் கொலைகளால் நடுங்கும் கொங்கு மக்கள்..!
சேலத்தில் முதிய தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பீகாரை சேர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் ஜாகீர் அம்மாபாளையம் எட்டிக்குட்டை தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். வீட்டில் முன்பாக இருக்கும் கடையை பாஸ்கரும் அவரது மனைவி வித்யாவும் கவனித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று பிற்பகல் நேரம் மளிகை கடையை திறந்து விட்டு பாஸ்கரனும் அவரது மனைவி வித்யாவும் வீட்டில் இருந்துள்ளனர். மேல்மாடியில் குடியிருக்கும் அவரது இளைய மகன் தினேஷ் எதேர்ச்சையாக கீழே இறங்கி வந்து பார்த்தபோது வீட்டினுள் பாஸ்கர் மற்றும் அவரது மனைவி வித்யா இருவரும் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தனர்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தினேஷ் உடனடியாக கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்து உள்ளனர். மேலும் இதுகுறித்து சூரமங்கலம் போலீசருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் நேரில் வந்து பார்த்தபோது வித்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டது தெரிய வந்தது. உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்ட பாஸ்கரன் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதையும் படிங்க: 50 கி.மீ சுற்றளவில் தொடரும் கொலைகள்.. ஒரே பாணியில் நடப்பது எப்படி? முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி..!
ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் பெரும்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி இந்த சம்பவம் குறித்து சேலம் மாநகர காவல் ஆணையாளர் பிரவீன் குமார் அபினபு நேரில் விசாரணை மேற்கொண்டார். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.
தாய் தந்தையருக்கு அடுத்த மாதம் 70-ம் திருமணம் நடத்தலாம் என திட்டமிட்டு இருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்ததாகவும் நாளை பழனி கோவிலுக்கு செல்லவிருந்த நிலையில் இருவரும் கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் மூத்த மகன் ராமநாதன் தெரிவித்தார். மேலும் 18 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜாதிர் அம்மாபாளையம் சுற்றுவட்டார பகுதியில் சட்டவிரோத மது விற்பனை கஞ்சா புழக்கம் அதிகம் இருக்கின்ற காரணத்தால் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என குற்றச்சாட்டும் கூறப்படுகிறது.
இருவரையும் கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.இதனிடையே குற்றசம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது ;
கொங்கு பகுதிகளில் தொடர்ச்சியாக, தனியாக வசிக்கும் வயதானவர்களை குறிவைத்து படுகொலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இன்று சேலம் ஜாகீர் அம்மாபாளையத்திலும், வயதான தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
சங்கிலித் தொடர் போல ஒரே பகுதியில், தொடர் படுகொலைகள் நடந்து வருகின்றன. ஆனால், கையாலாகாத திமுக அரசு, இதுவரை குற்றவாளிகளையும் கைது செய்யவில்லை. கொலைகளையும் தடுக்கவில்லை. தனியாக வசிப்பவர்களும், அவர்கள் குடும்பத்தினரும், கடுமையான அச்சத்தில் இருக்கின்றனர். பொதுமக்கள், தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளும் நிலையில்தான் தமிழகம் இன்று இருக்கிறது.
தினமும் வீண் விளம்பர நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருப்பதை நிறுத்தி விட்டு, இனியாவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது முதல் பணியான சட்டம் ஒழுங்கைக் கவனிக்க வேண்டும். இந்த நிலையில் முதிய தம்பதி கொலை வழக்கில் அதே பகுதியில் வசிக்கும் பீகாரை சேர்ந்த சந்தோஷ் என்பவரை சூரமங்கலம் போலீசார் கைது செய்துள்ளனர். தம்பதி பாஸ்கரன் - வித்யாவை அடித்து கொலை செய்து 18 சவரன் நகையை சந்தோஷ் திருடி சென்றது விசார்ணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: காஷ்மீர் தாக்குதல் விவகாரம்.. பதிலடி எப்படி இருக்கும்? அண்ணாமலை ஓபன் டாக்!