×
 

மனநலம் குன்றிய 16 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்... அதிமுக நிர்வாகி போக்சோவில் கைது..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நடமாடும் தையல் தொழிலாளியின் மகளான 16 வயது மனநலம் குன்றிய  சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

மன வளர்ச்சி குன்றிய 16 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அ.தி.மு.க. கவுன்சிலரின் கணவரும், அ.தி.மு.க. கிளைச்செயலாளருமான ராஜேந்திரன் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நடமாடும் தையல் தொழிலாளியின் மகளான 16 வயது மனநலம் குன்றிய  சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அவிநாசி நகராட்சி 12வது வார்டு அதிமுக கவுன்சிலராக இருப்பவர் சாந்தி, இவரது கணவர் ராஜேந்திரன் (51) இருசக்கர வாகனங்களின் பழுது நீக்கும் ஒர்க் ஷாப் ஒன்றை நடத்தி வருகிறார். 

மேலும் அதிமுக 12வது வார்டு கிளைச் செயலாளராகவும் ராஜேந்திரன் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் இவர் மீது மனநலம் குன்றிய சிறுமியின் பெற்றோர் பாலியல் புகார் அளித்துள்ளனர். அவிநாசி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் 16 வயது மன நலம் குன்றிய சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில், ராஜேந்திரன் தனது மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டியுள்ளனர். 

இதையும் படிங்க: அடச்சீ!! பள்ளிக்குச் சென்ற மாணவியிடம் பாலியல் சீண்டல்... அரசு பேருந்து நடத்துநர் போக்சோவில் கைது.!

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார்  ஊத்துக்குளி பகுதியில் தலைமறைவாக இருந்த ராஜேந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் சிறுமியின் பெற்றோரை மிரட்டியதாக பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் மூர்த்தி (52) என்பவர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அவிநாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: “வலிக்குது... என்னை விட்டுடுங்க தாத்தா...” - 10 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட 64 வயது முதியவர்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share