×
 

15 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை! மறுப்பு தெரிவித்தா கரண்ட் ஷாக்! காம லீலை போலி சாமியார் கைது!

தனக்கு அதீத தெய்வீக சக்தி இருப்பதாகவும், மனிதர்களின் மனதில் இருப்பதை தெரிந்து கொள்ளும் ஆற்றல் இருப்பதாகவும் கூறி ராதாமோகன் மிஸ்ரா அந்த குடும்பத்தினரை நம்பவைத்துள்ளார்.

மராட்டிய மாநிலம் புனே அருகே செயல்பட்டு வந்த ஒரு ஆசிரமத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னிடம் தெய்வீக சக்தி இருப்பதாகக் கூறி பக்தர்களை நம்பவைத்து வந்த போலி சாமியார் ராதாமோகன் மிஸ்ராவை போலீசார் கைது செய்துள்ளனர். அவருடன் தொடர்புடைய மேலும் 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புனேவின் கராடி பகுதியில் ‘நவீன குருகுலம்’ என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வந்த ராதாமோகன் மிஸ்ரா, கடந்த பல ஆண்டுகளாக ஒரு குடும்பத்தினரை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மனிதர்களின் மனதில் உள்ள எண்ணங்களை அறியும் சக்தி தன்னிடம் இருப்பதாகவும், ஆன்மிக வழிகாட்டுதலின் மூலம் வாழ்க்கை பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்றும் கூறி அவர் அந்த குடும்பத்தினரின் நம்பிக்கையை பெற்றிருந்தார்.

பக்தர்கள் தங்களின் அன்றாட சிந்தனைகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விவரங்களை எழுதி தர வேண்டும் எனக் கூறி, அந்த தகவல்களை பயன்படுத்தி அவர்களை மனரீதியாக கட்டுப்படுத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த முறையின் மூலம் குடும்ப உறுப்பினர்களை ஒருவரிடமிருந்து ஒருவராக பிரித்து, தனது செல்வாக்குக்குள் கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: லிப்டில் சில்மிஷம் செய்த மருத்துவமனை ஊழியர்! அதிரடி காட்டியது சிங்கப்பெண் அதிரடிப்படை!

இதன் பின்னர் அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் துன்புறுத்தலுக்கும், உடல் மற்றும் மனரீதியான சித்ரவதைகளுக்கும் ஆளாகியிருப்பதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாமியாரின் உத்தரவுகளை ஏற்க மறுத்தபோது அவருக்கு மின்சார அதிர்ச்சி கொடுக்கப்பட்டதாகவும், பல்வேறு மனிதாபிமானமற்ற கொடுமைகள் நிகழ்த்தப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், அந்த பெண்ணின் சொத்துகளை மோசடியாக தனது பெயருக்கு மாற்ற முயற்சித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், சூனிய எதிர்ப்பு மற்றும் மனித பலி தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆசிரமத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பல லேப்டாப்கள், ஹார்டு டிஸ்க்குகள், பென்டிரைவ்கள், ரொக்கப் பணம் மற்றும் தங்க, வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆசிரமத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இந்த சம்பவம் போலி ஆன்மிக தலைவர்களின் பெயரில் நடைபெறும் மோசடிகள் குறித்து மீண்டும் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: விமானப்படை அதிகாரி மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை! கட்டாய மதமாற்றம்! 2 பேர் கைது!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share