செந்தில் பாலாஜி மேல சந்தேகம் வரவே கூடாதா? பெலிக்ஸ் கைது சம்பவத்தை கண்டித்த காயத்ரி ரகுராம்...!
ரெட் பிக்ஸ் நிறுவனர் பெலிக்ஸ் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜயின் கரூர் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜயை நேரில் காண வந்தனர். போலீஸ் அனுமதி மனுவில் 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டிருந்த போதிலும், உண்மையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் திரண்டனர், விஜய் 6 மணி நேரம் தாமதமாக வந்ததால், வெயில் வாட்டும் பகலில் காத்திருந்த மக்கள் சோர்வடைந்தனர்.
குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகம் இருந்ததால், 9 வயது சிறுமி ஒருவர் காணாமல் போனதாக வந்த தகவல் கூட்டத்தை இன்னும் குழப்பமானதாக்கியது. மேலும், அந்த இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கரூர் சம்பவம் குறித்து வதந்தி பரப்ப கூடாது என முதலமைச்சர் ஸ்டாலின் நேற்றைய தினம் அறிவுரை வழங்கி இருந்தார். அது மட்டுமல்லாது சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், கரூர் சம்பவம் குறித்து வதந்தி பரப்பியதாக ரெட் பிக்ஸ் நிறுவனர் பெலிக்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை அதிமுக மகளிர் அணி மாநில துணை செயலாளர் காயத்ரி ரகுராம் கண்டித்துள்ளார்.
பேரணியின் போது செருப்புகள் மற்றும் கற்களை வீசியவர்களை அடையாளம் காண திமுக தவறியது என்றும் டிவிகே தொண்டர்களை கத்தியால் தாக்கியவர்களை கண்டறியத் தவறியது எனவும் கூறினார். பொதுமக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்படுத்தியவர்களை அடையாளம் காணவும் தவறியது திமுக என்று சாடினார். 40 உயிர்களை பரிகொடுத்த நிகழ்வில், இதற்குக் காரணமானவர்களைப் பற்றி கவலை இல்லை., ஆனால், பேச்சு சுதந்திரம் சார்ந்த கருத்து தெரிவித்த பத்திரிகையாளர் மற்றும் யூடியூபரான பெலிக்ஸ் கைது செய்யப்பட்டு இருப்பதாக கூறினார்.
இதையும் படிங்க: #BREAKING பாட்டிலுக்கு 10 ரூபாய்.. பாட்டு பாடி செந்தில் பாலாஜியை வம்புக்கிழுத்த விஜய்..!!
திமுகவையும் செந்தில் பாலாஜியையும் யாரும் சந்தேகிக்க கூடாதா என்றும் திமுகவை எதிர்த்து யாரும் பேசக்கூடாதா எனவும் கேள்வி எழுப்பி உள்ள அவர், பேசினால், திமுக அவர்களை தனிப்பட்ட முறையில் தாக்கி மிரட்டல் விடுக்கிறது எனவும் திமுக போலியான தகவல்களைப் பரப்பவில்லையா எனவும் அவர்கள் போலியான கதைகளை அமைக்கவில்லையா எனவும் இது அவர்களின் நடத்தை மற்றும் ஆட்சி திறனை வெளிப்படையாகக் காட்டுகிறது என்றும் சாடினார். அவர்கள் எந்த உச்சநிலைக்கும் செல்வார்கள் என்பது நமக்குத் தெரிவதுதான்., தவறுக்கு மேல் தவறு திமுக, அவர்கள் தோல்வியடைகிறார்கள் என்றார்.
இதையும் படிங்க: கூட்டத்தை தன்பக்கம் திருப்பிய செந்தில் பாலாஜி.. உடனே கத்திய திருச்சி சிவா.. என்ன நடந்தது..??