×
 
☰

ஜெம் வீரமணி வழக்கு! எவ்ளோ பெரிய ஆளாக இருந்தாலும் தப்பிக்க முடியாது! அமைச்சர் ரமேஷ் உறுதி!

திமுக–அதிமுக கூட்டணி அமைக்கப்பட்டதால் அதிலிருந்து வெளியேறி தவெகவில் இணைந்த முடிவை மக்கள் புரிந்து கொண்டுள்ளதாகவும், இது பணத்துக்காக நடந்தது அல்ல என்றும் அமைச்சர் ரமேஷ் கூறினார்.

சென்னை: பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பில் தமிழக அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும், ஜெம் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கில் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

கட்டுமானத் துறை சார்ந்த கிரடாய் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட மாபெரும் கண்காட்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதனை அமைச்சர் ரமேஷ் தொடங்கி வைத்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த பல்வேறு அரங்குகளை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார்.

ஜெம் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கு குறித்து பேசிய அமைச்சர், இந்த வழக்கில் தமிழக முதல்வர் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறினார். வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய நபர்களாக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஜெம் வீரமணி வழக்கு! மு.க.ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்! - சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு!!

வழக்கில் ஒவ்வொரு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார். இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிலர் கூறுவது குறித்து, “அவர் மீது என்ன கோபமோ தெரியவில்லை” என்றும் அமைச்சர் விமர்சித்தார்.

பெண்கள் பாதுகாப்புக்காக ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கை சுட்டிக்காட்டிய அவர், பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.

மேலும், “பேசுங்கள் ஸ்டாலின் சார்” என கடந்த ஒரு வாரமாக கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் விமர்சித்தார். அவர் ஏன் தற்போது அறிக்கை வெளியிட்டார் என்பது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரம் குறித்தும் அமைச்சர் பேசினார். முதல்வரின் உத்தரவின்படி தாராபுரத்தில் தேர்தல் பணியாற்றி வருவதாகவும், பொதுமக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகவும் கூறினார். கட்சி மாறியது தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் விமர்சனங்களையும் அவர் மறுத்தார்.

திமுக–அதிமுக கூட்டணி அமைக்கப்பட்டதால் அதிலிருந்து வெளியேறி தவெகவில் இணைந்த முடிவை மக்கள் புரிந்து கொண்டுள்ளதாகவும், இது பணத்துக்காக நடந்தது அல்ல என்றும் அமைச்சர் ரமேஷ் கூறினார்.

டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனைகளில் தேவையான வசதிகள் ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மின்வெட்டு தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளதாக கூறிய அவர், விடுதி மாணவர்களுக்கு மாட்டிறைச்சி வழங்குவது தொடர்பான கேள்விக்கு, அது சம்பந்தப்பட்ட துறையின் முடிவு என்பதால் அந்தத் துறை அமைச்சரிடம் கேட்க வேண்டும் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: வீரமணி வழக்கில் அடுத்த அதிரடி! சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றத்தில் முறையீடு! திடீர் திருப்பம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share