×
 
☰

ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்மனிடம் விடிய விடிய விசாரணை! புதிய திருப்பம்!

இதன் அடுத்த கட்டமாக, வீரமணி சிறுமியர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படும் இடங்களுக்கு சாந்தியை நேரில் அழைத்துச் சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: சிறுமியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள 'ஜெம்' கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி தொடர்பான வழக்கில், அவருக்கு நெருக்கமான சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்மனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

85 வயதான வீரமணி, சிறுமியருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவருக்கு நெருக்கமானவர்களாகக் கூறப்படும் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்மன் மற்றும் உதவியாளர் கணேசன் ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

வழக்கு விசாரணையில் வீரமணியின் ரகசிய டைரி மற்றும் சில வீடியோ பதிவுகள் முக்கிய ஆதாரங்களாக போலீசாரிடம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த பதிவுகள் மற்றும் விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: ஜெம் வீரமணி வழக்கில் உண்மையில் நடந்தது என்ன? திமுக மீது பழி? ரகுபதி வெளியிட்ட அதிரடி விளக்கம்!

மூன்று நாள் போலீஸ் கஸ்டடியில் எடுக்கப்பட்டுள்ள சாந்தி மற்றும் மகேந்திர சிம்மனிடம், வீரமணியுடன் அவர்களுக்கு இருந்த தொடர்பு, சிறுமியர்களை அவர் எத்தனை ஆண்டுகளாக குறிவைத்தார் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், வீரமணி தொடர்பான வீடியோ பதிவுகளை பயன்படுத்தி யாரிடமாவது பணம் பறிக்கப்பட்டதா, அதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே கிடைத்த தகவல்களை சாந்தி மற்றும் மகேந்திர சிம்மனிடம் போலீசார் முன்வைத்து, அவர்களின் பதில்களை ஒப்பிட்டு வருவதாக தெரிகிறது.

இதன் அடுத்த கட்டமாக, வீரமணி சிறுமியர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படும் இடங்களுக்கு சாந்தியை நேரில் அழைத்துச் சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் பங்கு, அவர்களுக்கு இடையேயான தொடர்புகள் மற்றும் போலீசாரிடம் சிக்கியுள்ள ஆவணங்கள், வீடியோ பதிவுகளின் பின்னணி குறித்து அடுத்தடுத்த விசாரணைகளில் கூடுதல் தகவல்கள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கின் உண்மை நிலை நீதிமன்ற விசாரணை மற்றும் போலீஸ் புலன் விசாரணையின் முடிவுகளின் அடிப்படையிலேயே உறுதி செய்யப்படும்.

இதையும் படிங்க: ஜெம் வீரமணியை தப்பிக்க விட்டது யார்? மு.க.ஸ்டாலினை நோக்கி அமைச்சர் நிர்மல்குமார் சரமாரி கேள்வி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share