காதலனை நம்பிச் சென்ற காதலி... நண்பர்களுக்கு விருந்தாக்கி சீரழித்த கொடூரன் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்...!
மேலூர் அருகே 19 வயது பெண்ணை காதலிப்பதாக கூறி தனிமையில் பேச அழைத்துச் சென்று நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த காதலன் உட்பட மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
மேலூர் அருகே 19 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு: காதலன் உட்பட மூன்று பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அ.வல்லாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கடந்த 02ஆம் தேதி இரவு அதே ஊரைச் சேர்ந்த தனது காதலன் தீபன்ராஜூடன் (25) ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள பாலம் அருகே தனிமையில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், காதலன் தீபன்ராஜ் ஆலோசனையின் பேரில் அங்கே வந்த அவனது நண்பர்களான மதன்(25), மற்றும் திருமாறன் (24) ஆகிய மூன்று பேரும் கூட்டாக சேர்ந்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதையும் படிங்க: ஓடும் பேருந்துக்குள் திடீரென அலறிய பெண்... சித்த மருத்துவர் செய்த கேவலமான காரியம்..!
இதுகுறித்து இளம்பெண் அளித்த தகவலின் பேரில், இளம்பெண்ணின் பெற்றோர்கள் மேலூர் அனைத்து மகளிர் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.
இதுதொடர்பாக மேலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காதலன் உட்பட மூவரை கைது செய்து நீதிமன்ற உத்தரவு பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மாவட்ட காவல்துறை விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவின் பேரில், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காதலன் தீபன்ராஜ், மற்றும் அவனது நண்பர்கள் மதன், திருமாறன் ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: கோயிலா..? சுடுகாடா?.. தோண்ட, தோண்ட வரும் பெண்களின் உடல்கள் - தர்மஸ்தலா மர்ம பிண்ணனி..!