×
 

இதை நாங்கள் விரும்பவில்லை; அமைதி வேண்டும்.. ஹிமான்ஷி கருத்தால் பரபரப்பு!!

தங்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்று பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட இந்திய கடற்படை லெப்டினன்ட் வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி தெரிவித்துள்ளார்.

காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில் பலர் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்துள்ளனர். அவ்வாறு இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர்தான் இந்தியக் கடற்படை அதிகாரி வினய் நர்வால். இவருக்கும் ஹிமான்ஷி என்ற பெண்ணுக்கும் கடந்த ஏப்ரல் 16ம் தேதி தான் திருமணம் நடந்திருந்தது. இவர்கள் தேனிலவுக்காகவே காஷ்மீர் சென்றிருந்தனர்.

அப்போது தான் தீவிரவாதிகள் விஜய்யை சுட்டுக் கொன்றுள்ளனர். இதுக்குறித்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. நர்வாலின் உடல் புதன்கிழமை பிற்பகல் காஷ்மீரில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து அவரது சொந்த ஊரான ஹரியானாவின் கர்னாலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையும் படிங்க: சர்ஜிகல் ஸ்ட்ரைக் ப்ளான்? - பாதுகாப்புத்துறை அமைச்சருடன் பிரதமர் திடீர் சந்திப்பு.. பீதியில் பாகிஸ்தான்!

அங்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. உடல் தகனம் செய்யப்பட்டபோது கடற்படை வீரர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மரியாதை செலுத்தினர். இந்தியக் கடற்படை அதிகாரி வினய் உடலுக்கு மூவர்ணக் கொடி போர்த்தப்பட்ட நிலையில், அவரது மனைவி ஹிமான்ஷி ஜெய் ஹிந்த் என முழங்கினார். முன்னதாக ஹிமான்ஷி, வினய் நர்வால் உடல் இருந்த பெட்டியை கட்டியணைத்து கதறியது காண்போரை கண்கலங்க செய்தது.

இந்த நிலையில் தற்போது அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தங்களுக்கு அமைதி வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், எங்களுக்கு நீதி வேண்டும். ஆனால் அதேசமயம் முஸ்லிம்கள் அல்லது காஷ்மீரிகளுக்கு எதிராக மக்கள் செல்வதை நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு அமைதி வேண்டும், அமைதி மட்டுமே வேண்டும். என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதலில் தீவிரவாதிகள் என்ன செய்தனர்? நேரில் பார்த்த பெண் பரபரப்பு வாக்குமூலம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share