காலக்கெடு நீட்டிப்பு... வருமான வரி செலுத்தாதவர்களுக்கு வெளியானது குட்நியூஸ்...!
வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய அளிக்கப்பட்டு இருந்த கால அவகாசம் மேலும் ஒருநாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றும் கணக்கை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2025/2026 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. ஐடிஆர் படிவத்தில் மேற்கொண்ட சில மாற்றங்கள் எதிரொலியாக, கணக்கு தாக்கல் செய்யும் காலம் செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் வருமானவரித்துறை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் அபராதம் இன்றி வரி செலுத்துவோர் தங்கள் கணக்கை இன்றும் தாக்கல் செய்யலாம் என அறிவித்துள்ளது.
எதற்காக இந்த நீட்டிப்பு?
வருமான வரி போர்ட்டலில் ஏற்பட்ட தொடர்ச்சியான தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக பல வரி செலுத்துவோர் செயல்முறையை முடிக்க சிரமப்பட்டதைத் தொடர்ந்து இந்த நீட்டிப்பு வந்தது.
இதையும் படிங்க: இதுவே கடைசியா இருக்கட்டும்... டென்ஷனின் உச்சிக்கே சென்ற பிரேமலதா... தேமுதிக நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை...!
தாக்கல் செய்யும் பயன்பாடுகளில் தேவையான புதுப்பிப்புகள் மற்றும் மாற்றங்களை எளிதாக்குவதற்காக, செப்டம்பர் 16 நள்ளிரவு 12:00 மணி முதல் 2:30 மணி வரை போர்டல் பராமரிப்புக்கு உட்படும் என்றும் துறை அறிவித்துள்ளது.
இந்த நீட்டிப்பு வரி செலுத்துவோருக்கு சற்று நிம்மதியை அளிக்கும் அதே வேளையில், கடைசி நேர தொழில்நுட்பக் கோளாறுகள் அல்லது அபராதங்களைத் தவிர்க்க அனைவரும் தங்கள் தாக்கல்களை சரியான நேரத்தில் முடிக்குமாறு துறை வலியுறுத்தியுள்ளது.
செப்டம்பர் 15ஆம் தேதி வரை 7 கோடிக்கும் மேற்பட்ட வருமான வரி தாக்கல்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது
இதையும் படிங்க: டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி... அமித் ஷாவிற்கு நோ சொல்லப்போகிறாரா? - பரபரக்கும் அரசியல் களம்...!