×
 

கண்ணி வெடியில் சிக்கிய 7 வயது சிறுமி! பன்றியை பிடிக்க வைத்த பொறியால் நேர்ந்த விபரீதம்! கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி!

சிறுமி மிதித்ததில் அந்த கண்ணிவெடி திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. இந்த வெடி விபத்தில் நிஷாந்தனாவின் இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் சிறுமி அலறி துடித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே பன்றிகளை பிடிப்பதற்காக நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்ததில், இயற்கை உபாதைக்காக சென்ற 2-ம் வகுப்பு மாணவி படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள ஜா.ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமாறன் (34). இவரது மகள் நிஷாந்தனா (7). இவர் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில், ஜா.ஏந்தல் கிராமத்தை ஒட்டியுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே அசகளத்தூரில் உள்ள தனிநபருக்கு சொந்தமான நிலப்பகுதிக்கு நிஷாந்தனா சென்றுள்ளார். அப்போது இயற்கை உபாதையை கழிப்பதற்காக சென்ற சிறுமி, அங்கு பன்றிகளை பிடிப்பதற்காக புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியை எதிர்பாராதவிதமாக மிதித்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: "மன்மத நன்றி"..! இதுக்கு END- ஏ இல்லையா.? கள்ளக்குறிச்சி MLA பேச்சால் அரண்டுப்போன கனிமொழி..!

சிறுமி மிதித்ததில் அந்த கண்ணிவெடி திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. இந்த வெடி விபத்தில் நிஷாந்தனாவின் இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் சிறுமி அலறி துடித்துள்ளார்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் படுகாயம் அடைந்த சிறுமியை மீட்டு, உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு நிஷாந்தனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிறுமி சென்ற பகுதியில் பன்றிகளை பிடிப்பதற்காக வெடிபொருள் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் நிலையில், பொதுமக்கள் நடமாடும் பகுதிக்கு அருகில் இதுபோன்ற ஆபத்தான முறையை பயன்படுத்தியது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக வரஞ்சரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கண்ணிவெடி எவ்வாறு அங்கு புதைத்து வைக்கப்பட்டது, அதை பயன்படுத்தியவர்கள் யார் என்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

7 வயது சிறுமி கண்ணிவெடி வெடித்ததில் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட பெண் திடீர் மரணம்... கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share