Instagram-ல் தொடங்கிய பழக்கம்!! காதல் என கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை! 4 பேர் கைது! பகீர் சம்பவம்!
Instagram மூலம் அறிமுகமான அஜன் என்பவர் காதலிப்பதாக கூறி தனியாக அழைத்துச் சென்றதாகவும், அங்கு பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அதை வீடியோவாக பதிவு செய்து மிரட்டியதாகவும் புகார் அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரின் பேரில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். Instagram மூலம் ஏற்பட்ட பழக்கம் தொடங்கி, அடுத்தடுத்து நடந்ததாக கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாக குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளிச்சந்தை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த மாதம் திடீரென மாயமானதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு வாரத்துக்குப் பிறகு அந்த இளம்பெண் மீண்டும் வீட்டுக்கு திரும்பியதாக கூறப்படுகிறது.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, Instagram மூலம் அறிமுகமான அஜன் என்பவர் காதலிப்பதாக கூறி தனியாக அழைத்துச் சென்றதாகவும், அங்கு பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அதை வீடியோவாக பதிவு செய்து மிரட்டியதாகவும் புகார் அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இன்ஸ்டா காதல்... +2 மாணவி வன்கொடுமை.! 4 பேர் போக்சோவில் அரெஸ்ட்..!!
இதையடுத்து, தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து விவேக் என்பவரிடம் இளம்பெண் தெரிவித்ததாகவும், உதவி செய்வதாக கூறிய அவர் மீதும் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும், பரப்புவிளையைச் சேர்ந்த தினேஷ் மற்றும் நாகர்கோவிலைச் சேர்ந்த ஆன்றோ ஜெரிஷ் ஆகிய இருவரும் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் அஜன், விவேக், தினேஷ், ஆன்றோ ஜெரிஷ் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இதில் தலைமறைவாக இருந்த இருவர் சென்னையில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டவை என்பதால், குற்றம் நிரூபிக்கப்படும் வரை கைது செய்யப்பட்டவர்கள் குற்றவாளிகள் என சட்டரீதியாகக் கூற முடியாது.
இதையும் படிங்க: கனிம சுரங்கத்திற்காக குமரியை அழிப்பதா.? செப்.26 ல் ஆர்ப்பாட்டம்..! தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிவிப்பு.!