போலீஸ் உடையில் பெண்களிடம் சில்மிஷம்!! கர்நாடக டிஜிபியின் அந்தரங்க வீடியோ வெளியாகி பகீர்!!
பெங்களூரில் தங்கம் கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள, கன்னட நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தையான போலீஸ் டி.ஜி.பி., ராமச்சந்திர ராவ், பணி நேரத்தில் போலீஸ் சீருடையில் பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் 3 வீடியோக்கள் வெளியாகி உள்ளன.
பெங்களூரு: கர்நாடக போலீஸ் துறையை உலுக்கும் பெரும் ஊழல் சர்ச்சை! சிவில் உரிமைகள் அமலாக்க இயக்குநரக டி.ஜி.பி.யாக பணியாற்றி வரும் கே. ராமச்சந்திர ராவ், பெண்களுடன் அலுவலகத்தில் ஆபாசமாக நடந்து கொள்ளும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமச்சந்திர ராவ், கன்னட நடிகை ரன்யா ராவின் வளர்ப்புத் தந்தை ஆவார். ரன்யா ராவ் கடந்த ஆண்டு தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்நிலையில், தற்போது ராமச்சந்திர ராவின் அலுவலகத்தில் பணி நேரத்தில் போலீஸ் சீருடையுடன் பெண்களுடன் நெருக்கமாக இருப்பதை காட்டும் 3 வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
இதில் இரண்டு வீடியோக்களில் அவர் சீருடை அணிந்திருந்த நிலையில், ஒரு வீடியோவில் சாதாரண உடையில் உள்ளார். பெண்களின் முகங்கள் மறைக்கப்பட்டுள்ளன. அவர்கள் ஒரே நபரா அல்லது வெவ்வேறு பெண்களா என்பது தெரியவில்லை. வீடியோக்களில் பெண்கள் விருப்பத்துடன் நடந்து கொள்வது போல தெரிகிறது.
இதையும் படிங்க: கடற்படை குறித்து பாகிஸ்தானுக்கு தகவல் அனுப்பிய உளவாளி!! இந்தியாவுக்கு எதிராக பின்னப்பட்ட சதிவலை!
இந்த வீடியோக்கள் தனித்தனியாக எடுக்கப்பட்டு, எடிட் செய்யப்பட்டு, பின்னணி இசையுடன் சமூக வலைதளங்களில் பரவியுள்ளன. இது மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முதலமைச்சர் சித்தராமையா இது குறித்து, "காலையில் என் கவனத்திற்கு வந்தது. விசாரணை நடத்தப்படும். தவறு நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எவ்வளவு உயர் அதிகாரியாக இருந்தாலும் சட்டத்திற்கு மேலானவர் இல்லை" என்று தெரிவித்தார்.
துணை முதலமைச்சர் சிவகுமார் இது குறித்து "எனக்கு எதுவும் தெரியாது. முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் கேளுங்கள்" என்று மழுப்பலாக பதிலளித்தார்.
இதனையடுத்து, ராமச்சந்திர ராவ் உள்துறை அமைச்சர் பரமேஸ்வரை சந்திக்க முயன்றார். ஆனால் அமைச்சர் அவரை சந்திக்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பின்னர் வெளியே அளித்த பேட்டியில், "இந்த வீடியோக்கள் AI (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் கொண்டு தயாரிக்கப்பட்டவை. என் நற்பெயரை கெடுக்க யாரோ சதி செய்துள்ளனர். வக்கீலுடன் ஆலோசித்து சட்ட நடவடிக்கை எடுப்பேன்" என்று கூறினார்.
மேலும், நேற்று மாலை ஒரு அடையாளம் தெரியாத பெண்ணுடன் ராமச்சந்திர ராவ் ஆபாசமாக பேசும் ஆடியோவும் வெளியாகியுள்ளது. இதனால் சர்ச்சை மேலும் வலுத்துள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் சித்தராமையா விசாரணைக்கு ஆணையம் அமைத்து உத்தரவிட்டுள்ளதுடன், விசாரணை முடியும் வரை ராமச்சந்திர ராவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் கர்நாடக போலீஸ் துறையின் நற்பெயருக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை முடிவுகள் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படிங்க: ஜி ராம் ஜி மூலம் ரூ. 5000 கோடி கூடுதல் செலவு... ஆளுநர் உரையை வாசித்த சபாநாயகர் அப்பாவு..!