×
 

ஒரு லட்சம் மஞ்சள் பைகள்... திமுக முப்பெரு விழாவில் ஸ்பெஷல் ஏற்பாடு... என்ன இருக்கு தெரியுமா?

தொண்டர்கள் அமரும் வகையில் விழா மேடை முன்பு  ஒரு லட்சம் இருக்கைகள் போடப்பட்டுள்ளது.

கரூரில் திமுக முப்பெரும் விழா இன்று மாலை நடைபெறுகிறது. 1 லட்சம் இருக்கைகள் போடப்பட்டுள்ளது. விழாவில் சுமார் 3 லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரூர் கோடங்கிபட்டி சாலையில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான விழா மேடையில் இன்று மாலை திமுகவின் முப்பெரும் விழா நடைபெறுகிறது. விழாவிற்கு திமுக கழக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை வகிக்கிறார். கரூர் சட்டமன்ற உறுப்பினரும், கொங்கு மண்டல பொறுப்பாளரும் எம்எல்ஏ செந்தில் பாலாஜி வரவேற்று பேசுகிறார். விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

முப்பெரும் விழாவில் தந்தை பெரியார் விருது எம்பி கனிமொழிக்கும், அண்ணா விருது தணிக்கை குழு  முன்னாள் உறுப்பினர் சுப.சீத்தாராமன் அவர்களுக்கும், கலைஞர் விருது நூற்றாண்டு கண்டவரும் அண்ணாநகர் பகுதி முன்னாள் செயலாளரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான சோ.மா.  ராமச்சந்திரனுக்கும், கழக மூத்த முன்னோடி தலைமை செயற்குழு உறுப்பினர் நினைவில் வாழும் குளித்தலை சிவராமன் குடும்பத்தினருக்கு பாரதிதாசன் விருதும், கழக ஆதிதிராவிடர் நல குழு தலைவர் மருது ராமலிங்கத்திற்கு பேராசிரியர் விருதும், முன்னாள் அமைச்சர் பொங்களூர் நா. பழனிச்சாமிக்கு மு க ஸ்டாலின் விருதும் இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வழங்குகிறார்.

இதையும் படிங்க: AI வீடியோவை உடனே டெலிட் பண்ணுங்க! ட்விட்டர், பேஸ்புக் கூகுளுக்கும் உத்தரவு! கலக்கத்தில் காங்.,!

 இந்த நிலையில் தொண்டர்கள் அமரும் வகையில் விழா மேடை முன்பு  ஒரு லட்சம் இருக்கைகள் போடப்பட்டுள்ளது. விழாவில் சுமார் மூன்று லட்சம் தொண்டர்கள் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

1 லட்சம் தொண்டர்கள் அருந்தும் வகையில் மைசூர் பாகு, மிச்சர், தண்ணீர் பாட்டில் பிஸ்கட் என சிற்றுண்டி அடங்கிய மஞ்சள் பைகள் ஒரு லட்சம் இருக்கைகளில்  வைக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: “உட்கார்றியா... இல்லையா...” - மேடையிலேயே டென்ஷன் ஆன வைகோ... மதிமுக கூட்டத்தில் பரபரப்பு....!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share