×
 

ஏமாற்றிய யூடியூபர்.. ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டல்.. இளம்பெண்ணிடம் பலமுறை அத்துமீறிய கொடூரம்..!

கேரளாவில் இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை உடலுறவு கொண்டதோடு மட்டுமல்லாமல் ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டிய யூடியூபரை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வழிக்கடவு அருகே சோய்த்தலா குடும்பத்தை சேர்ந்தவர் ஜூனைத் (வயது 32). கேரளாவில் பிரபல யூ-டியூபரான ஜூனைத், பல்வேறு வீடியோக்கள் வெளியிட்டு பிரபலமானார். முக்கியமாக பாடல்களின் வரிகளுக்கு ஏற்ப உடல் அசைவுகளை வெளிபப்டுத்து நடனமாடி மக்களை கவர்ந்துளார். இவரது வீடியோக்கள் மூலம் ஈர்க்கப்பட்ட இளம் பெண் ஒருவர், சமூக வலைத்தளம் மூலம் இவரிடம் நட்பாக பழகினார். சிறுது நாளிலேயெ இவர்களது பழக்கம் நட்பில் இருந்து காதலாக மலர்ந்துள்ளது. முதலில் ஜூனைத் தான் அந்த இளம்பெண்ணை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி உள்ளார். இவர்களி இந்த காதல் பயணம் கடந்த 2 ஆண்டுகளாக  தொடர்ந்துள்ளது.

காதலிக்கும் போது ஜூனைத் அன்பாக பழகி உள்ளார். அந்த இளம்பெண்ணை மலப்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது இளம்பெண்ணும், ஜூனைத்தும் பல ஓட்டல்களிலும், லாட்ஜ்களிலும் ஒன்றாக தங்கி உள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் ஜூனைத், அந்த இளம்பெண்ணை காதலிப்பதாகவும், திருஅம்னக் செய்து கொள்வதாகவும் கூறி மூளைச்சலவை செய்து பலமுறை உடல் உறவு கொண்டுள்ளார். அப்போது அந்த தருணங்களை வீடியோவாக தனது செல்போனிலும் பதிவு செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 2 ஆண்டுகளாக காதலிப்பதாக மட்டுமே கூறி வரும் ஜூனைத்தை திருமணம் செய்து கொள்ளும் படி அந்த இளம்பெண் வற்புறுத்தி உள்ளார். ஆனால் ஜூனைத் ஏதாவது சாக்கு சொல்லி அதை தட்டிக்கழித்ததாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: வாட்சப் மூலம் தலாக் கொடுத்த கணவன்...அடுத்து மனைவி கொடுத்த அதிர்ச்சி!!

நாளாக நாளாக அந்த  இளம்பெண்ணை ஜுனைத் திருமணம் செய்ய மறுத்துள்ளார். ஆனால் ஒன்றாக இருந்த சமயங்களில்  எடுக்கப்பட்ட ஆபாசமாக புகைப்படம் மற்றும் வீடியோக்களை காட்டி அந்த இளம்பெண்ணை ஜூனைத் மிரட்டி உள்ளார். அந்த ஆபாச புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியும் பலமுறை பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனால் அப்பெண் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளானார். பிறகு பாதிக்கப்பட்ட இளம்பெண் ஜூனைத் குறித்து மலப்புரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து மலப்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.விஷ்ணு, சப்-இன்ஸ்பெக்டர் பிரியன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் இதுகுறித்து விசாரணை நடத்தினர். 

இதற்கிடையே போலீஸ் தன்னை தேடுவதாக தகவல் அறிந்து ஜூனைத் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் வலை வீசி தேடி வந்துள்ளனர். போலீசாரிடம் இருந்து தப்பிக்க ஜூனைத் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் வெளிநாடு தப்ப இருப்பதாகவும் ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் பெங்களூரு விமான நிலைய பகுதிக்கு சென்று பெங்களூரு மாநகர போலீசார் உதவியுடன் அங்கிருந்த ஜூனைத்தை மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து கைதான அவரை மலப்புரம் அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதையும் படிங்க: கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை..! ரூ.1 கோடி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share