12 வயது சிறுமியை கொன்ற 14 வயது சிறுவன்!! கிரைம் படங்கள் பார்த்து ஸ்கெட்ச்!
ஓ.டி.டி திரைப்படங்கள் மூலம் பக்கத்து வீட்டில் திருட முயன்ற 14 வயது சிறுவன், அந்த வீட்டில் இருந்த 12 வயது சிறுமியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஐதராபாத் குகட்பள்ளியில் 12 வயசு ஆறாம் வகுப்பு மாணவி சஹஸ்ராவோட கொடூர கொலை, நகரத்தையே உலுக்கியிருக்கு. இந்த மர்மத்தை காவல்துறை கண்டுபிடிச்சு, பக்கத்து குடியிருப்பில் வசிச்ச 14 வயசு பத்தாம் வகுப்பு பையனை கைது பண்ணியிருக்கு. இந்த சம்பவம், ஒரு சாதாரண திருட்டு முயற்சி எப்படி கொலையா மாறுச்சுன்னு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கு.
சங்கரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணாவும் ரேணுகாவும், தங்களோட மகன், மகள் சஹஸ்ராவோடு 5 வருஷத்துக்கு முன்னாடி குகட்பள்ளி, சங்கீத் நகருக்கு குடிபெயர்ந்தாங்க. கிருஷ்ணா பைக் மெக்கானிக்கா, ரேணுகா ஆய்வக டெக்னீஷியனா வேலை பார்க்குறாங்க. சஹஸ்ரா, பேகம்பேட்டையில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் ஆறாம் வகுப்பு படிச்சுட்டு இருந்தா. ஆகஸ்ட் 18-ம் தேதி, விளையாட்டு போட்டி காரணமா பள்ளிக்கு விடுமுறை. அதனால, சஹஸ்ரா வீட்டுல தனியா இருந்தா. பெற்றோர், தம்பிக்கு மதிய உணவு பாக்ஸ் கொடுக்க சஹஸ்ராவை சொல்லிட்டு வேலைக்கு போயிருந்தாங்க.
அதே நேரம், பக்கத்து குடியிருப்பில் வசிச்ச 14 வயசு பையன், சஹஸ்ரா வீட்டுல யாரும் இல்லைன்னு நினைச்சு, திருட்டு திட்டத்தோடு சுவர் ஏறி உள்ள நுழைஞ்சான். ₹80,000 பணமும், ஒரு கிரிக்கெட் பேட்டும் திருடுறதுக்கு முன்னாடி “மிஷன் டான்”னு ஒரு திட்டத்தை காகிதத்துல எழுதி வச்சிருந்தான். இதுல, வீட்டு பூட்டை உடைக்குறது, பணத்தை எடுக்குறது, எரிவாயு கசிவு ஏற்படுத்துறது மாதிரி விவரங்கள் இருந்துச்சு. ஆனா, சஹஸ்ரா வீட்டுல இருந்ததை அவன் எதிர்பார்க்கல.
இதையும் படிங்க: "SAFETY FIRST"...தூய்மை பணியாளர்களுக்கு பூட்ஸ் குடுங்க! தமிழக அரசுக்கு தமிழிசை வலியுறுத்தல்
பாத்ரூம்ல இருந்து வந்த சஹஸ்ரா, அவனை பார்த்து “அப்பாக்கு சொல்றேன்”னு கத்தினா. பதறிப்போன பையன், முதல்ல அவளை கழுத்தை நெறிச்சு, பின்னர் கத்தியால 21 முறை குத்தி கொலை பண்ணிட்டான். 10 குத்து கழுத்துல, 7 வயித்துல இருந்ததா பிரேத பரிசோதனை சொல்றது.
கொலை பண்ணிட்டு, அவன் சுவர் ஏறி திரும்பவும் தன்னோட குடியிருப்புக்கு ஓடிட்டான். மதியம் 12 மணிக்கு, சஹஸ்ராவோட தம்பிக்கு உணவு பாக்ஸ் வரலன்னு பள்ளியில் இருந்து போன் வந்ததும், கிருஷ்ணா வீட்டுக்கு வந்து, சஹஸ்ராவை இரத்த வெள்ளத்துல பார்த்து அதிர்ந்து போய் காவல்துறைக்கு புகார் கொடுத்தாரு. காவல்துறை, தடயவியல் குழு, மோப்ப நாய் படையோடு விசாரணையை தொடங்குச்சு. ஆனா, முதல் 3 நாளைக்கு எந்த தடயமும் கிடைக்கல.
அப்போ, பக்கத்து குடியிருப்பில் இருக்குற ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர், கொலை நடந்த நேரத்துல பையன் 15 நிமிடம் மறைஞ்சு இருந்ததை பார்த்ததா சொன்னாரு. இதோடு, சஹஸ்ரா “அப்பா, அப்பா”னு கத்தினதை அந்த பையன் கேட்டதா சொன்னது, காவல்துறைக்கு சந்தேகத்தை கிளப்புச்சு.
விசாரணையில், முதல்ல மழுப்பின பையன், காவல்துறையோட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாம ஒத்துக்கிட்டான். அவனோட வீட்டுல இருந்து “மிஷன் டான்” காகிதம், இரத்தம் படிந்த கத்தி, துணிகள் கைப்பற்றப்பட்டு இருக்கு. அவனோட குடும்பம் ஆந்திராவோட பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தது.
அவனோட அப்பா குடிகாரர், அம்மா வேலைக்கு போய் குடும்பத்தை நடத்துறாங்க. பணப்பிரச்சினை, மன அழுத்தத்தால இந்த திருட்டு திட்டத்தை போட்டதா காவல்துறை சொல்றது. OTT-யில் க்ரைம் படங்களை பார்த்து, இந்த திட்டத்தை தீட்டியிருக்கான்னு சந்தேகிக்கப்படுது. பையனை ஜுவைனல் ஜஸ்டிஸ் போர்டுக்கு அனுப்பியிருக்காங்க.
இதையும் படிங்க: #BREAKING: இடிதாக்கி 2 சிறுமிகள் பலி! சம்பவ இடத்திலேயே உயிர் போன சோகம்... கதறும் தாய்