ஞாயிற்றுக்கிழமை தேவையா என கேட்ட எல் அண்ட் டி தலைவரா இது?... மகளிருக்கு வெளியிட்ட ஸ்பெஷல் அறிவிப்பு...!
எல் அண்ட் டி தலைவர் எஸ்.என். சுப்பிரமணியன் தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
எல் அண்ட் டி தலைவர் எஸ்.என். சுப்பிரமணியன் தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான லார்சன் & டூப்ரோவின் தலைவர் எஸ்.என். சுப்பிரமணியன் மீண்டும் ஒருமுறை செய்திகளில் இடம்பிடித்துள்ளார். மகளிர் தினத்தை முன்னிட்டு, அவரது நிறுவனத்தில் பெண் ஊழியர்களுக்காக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு வைரலாகி வருகிறது.
எஸ்.என். சுப்பிரமணியன் தற்போது நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சீன ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்க நடவடிக்கை வேண்டும்... உமர் அப்துல்லா வலியுறுத்தல்..!
மாதவிடாய் கால விடுப்புக்கான கோரிக்கை :
எல் அண்ட் டி நிறுவனத்தில் பணிபுரியும் 60,000 ஊழியர்களில் கிட்டத்தட்ட 9 சதவீதம் பேர் பெண்கள். "வடிகட்டப்படாத உண்மை: பெண் வல்லுநர்கள் உண்மையில் விரும்புவது என்ன" என்ற தலைப்பில் நௌக்ரி வெளியிட்ட அறிக்கையின்படி, 34 சதவீத பெண் நிபுணர்கள் தங்கள் மாதவிடாய் காலத்தில் விடுப்பு கோருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை சர்ச்சை:
இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நேரத்தில் சுப்பிரமணியனின் அறிக்கை ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் எல் அண்ட் டி தலைவர் எஸ்.என். சுப்பிரமணியன், “ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டில் உட்கார்ந்து கொண்டு தங்கள் மனைவிகளின் முகத்தை பார்த்துக் கொண்டே இருப்பதை விட, ஊழியர்கள் வாரத்திற்கு 90 மணிநேரம் வேலை செய்யலாம் என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
நிறுவன ஊழியர்களுடனான ஆன்லைன் உரையாடலின் போது, சுப்பிரமணியன், "ஞாயிற்றுக்கிழமை உங்களை வேலை செய்ய வைக்க முடியாததற்கு நான் மிகவும் வருந்துகிறேன்" என்றார். ஞாயிற்றுக்கிழமையும் உங்களை வேலைக்கு அழைத்துச் சென்றால், நான் மகிழ்ச்சியடைவேன் எனக்கூறிய அவர், 'வீட்டில் உட்கார்ந்து என்ன செய்கிறீர்கள்?' என்றார். உங்க மனைவியை எவ்வளவு நேரம் தான் பார்க்க முடியும்? உங்கள் மனைவியும் உங்களையே எவ்வளவு நேரம்தான் முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்க முடியும்? " அலுவலகத்திற்குப் போய் வேலையைப் பாருங்கள்” என பேசியிருந்தார். இந்த கருத்து சோசியல் மீடியாவில் வைரலானதை அடுத்து, அவர் நிறைய விமர்சனங்களை எதிர்கொண்டார்.
மகளிர் தின ஸ்பெஷல் அறிவிப்பு:
இன்று உலகம் முழுவதும் பெண்கள் தினம் கொண்டாட்டப்பட்டு வரும் நிலையில், மாதவிடாய் காலத்தில் மட்டும் ஒருநாள் விடுப்பு அளித்து லார்சன் & டூப்ரோவின் தலைவர் எஸ்.என். சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிவிப்பு வாழ்த்துக்களை குவித்து வருகிறது.
ஆகஸ்ட் 2024 முதல், அரசு மற்றும் தனியார் துறைகளில் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஒரு நாள் விடுப்பு வழங்கும் முதல் மாநிலமாக ஒடிசா மாறவுள்ளது. இப்போது கர்நாடக அரசும் இதேபோன்ற முயற்சியை மேற்கொண்டு வருகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் வருடத்திற்கு ஆறு நாட்கள் விடுமுறை அளிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது. இதற்காக தயாரிக்கப்பட்ட வரைவில், மாதவிடாய் காலத்தில் பெண்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சவால்களை எதிர்கொள்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மாதவிடாய் விடுப்பின் உதவியுடன், அவர்கள் தங்கள் பணி வாழ்க்கையை சமநிலைப்படுத்த முடியும் என்று அது கூறுகிறது. இந்த விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, எல்&டி எடுத்த முடிவு ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தமிழக அரசு உடனான மோதல் தணிந்ததா..? ஆளுநர் காட்டிய கிரீன் சிக்னல்..!