×
 

வீட்ல யாருமில்ல! நீ வா!! இன்னைக்கு வித்யாசமா பண்ணலாம்!! காதலனை நைசாக வரவழைத்து கதையை முடித்த காதலி!!

வித்தியாசமான முறையில் காதலை கூறுவதாக சொல்லி, காதலனின் கை, கால்கள் மற்றும் கண்களை துணியால் கட்டி, பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற காதலி கைது செய்யப்பட்டார்.

பெங்களூருவில் காதல் கொடூரமாக முடிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜாஜி நகரில் வசித்து வந்த 25 வயதான கிரண், ஒரு ‘சிம் கார்டு’ விற்பனை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில் வேலை செய்த பேடரஹள்ளியை சேர்ந்த 23 வயதான பிரேமாவுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் நெருக்கமாக பழகி வந்த நிலையில், இந்த உறவு எதிர்பாராத விதமாக கொலைக்குச் சென்றது. 

சம்பவம் நடந்த நாளில், பிரேமா வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். அவரது தாய் மற்றும் சகோதரர் வெளியே சென்றிருந்த நேரத்தில், மதியம் சுமார் 3 மணியளவில் கிரணை தொலைபேசியில் அழைத்து, “வீட்டில் யாரும் இல்லை, உடனே வா” என்று கூறியுள்ளார். இதையடுத்து கிரண் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். ஆரம்பத்தில் இருவரும் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தனர்.

அதன் பின்னர், “வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்தப் போகிறேன்” என்று கூறி, கிரணின் கண்களை துணியால் கட்டியுள்ளார். அதில் நிற்காமல், அவரது கை மற்றும் கால்களையும் கயிறால் கட்டியுள்ளார். எதையும் சந்தேகிக்காத கிரண் அதற்கு இணங்கியுள்ளார். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. திடீரென கிரண் மீது பெட்ரோல் ஊற்றி, பிரேமா தீ வைத்துள்ளார்.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜி போட்டியிடும் தொகுதியில் தேர்தலை நிறுத்த வாய்ப்பு!! கோவை தெற்கில் பணப்பட்டுவாடா புகார்!!

கைகள், கால்கள் கட்டப்பட்டதால் தப்பிக்க முடியாமல் தவித்த கிரண், தீயில் எரிந்து அலறியுள்ளார். அவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்துள்ளனர். அப்போது பிரேமா தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றதுடன், கயிறுகளையும் அவிழ்த்துள்ளார். பின்னர், தானில்லை என்ற நேரத்தில் கிரண் தீ வைத்து கொண்டதாக பொய் கூறியுள்ளார்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே கிரண் உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் பிரேமாவின் பதில்கள் சந்தேகத்தை ஏற்படுத்தியதால், அவரது மொபைல் போனை சோதனை செய்தனர். அதில் கிரணை கட்டும் காட்சிகள் வீடியோவாக இருந்தது வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து பிரேமா குற்றத்தை ஒப்புக்கொண்டார். ஆனால் கொலையின் காரணம் குறித்து அவர் எதையும் தெரிவிக்க மறுத்துள்ளார். தற்போது அவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பணம் இன்னும் வந்து சேரல!! தவிக்கும் அதிமுக வேட்பாளர்கள்! கடைசி நேரத்தில் கை விரித்த கட்சி தலைமை!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share