காதலியை கொன்ற காதலன்.. முன்னாள் காதலிகளின் தலையீடு இருந்ததை உறுதி செய்த போலீசார்!
சேலம் மாவட்டம் ஏற்காடு மலை பகுதியில் முன்னாள் காதலிகளுடன் சேர்ந்து தற்போதைய காதலியை சதி திட்டம் தீட்டி கொலை செய்த காதலன்.
சேலம் மாவட்டம் ஏற்காடு மலை பகுதியில் சாலையோர பள்ளத்தில் பெண்ணின் சடலம் இருப்பதாக போலீசாருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து உயிரிழந்த பெண் யார், தற்கொலையா அல்லது யாரேனும் கொலை செய்து வீசப்பட்டாரா என போலீசார் விசாரணை தீவிர படுத்தினர். அப்படி அப்பகுதியில் சென்ற வாகனங்கள் மற்றும் அப்பகுதி மக்கள் இடையே தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை கை பற்றி அதன் காட்சிகளை ஆய்வு செய்தனர். முன்னதாக பெண்ணின் சடலத்திற்கு அருகில் கிடந்த பை ஒன்றில், ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகள் கிடந்துள்ளது. அதனை கைப்பற்றிய போலீசார், உயிரிழந்த பெண் திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த மாரிமுத்து என்பவருடைய மகள் லோகநாயகி என்றது தெரிய வந்தது.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் புனித யாத்திரை ஜூலை 3ம் தேதி தொடக்கம்..!
திருச்சியை சேர்ந்த பெண் ஏற்காட்டில் மர்மமாக உயிரிழந்த கிடந்தது போலீசாருக்கு கூடுதல் சந்தேகத்தை வலுக்கச் செய்தது. இதுகுறித்து ஏற்காடு போலீசார் தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கவே, சேலம் மாவட்டத்தில் லோகநாயகி காணாமல் போனதாக விடுதி உரிமையாளர் புகார் அளித்திருந்தது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் விசாரணையை தீவிர படுத்திய நிலையில், போலீஸாருக்கு துப்பு சீட்டாக அமைந்தது அவரது காதலனுடைய கதை. லோக நாயகியின் செல்போனை ஆய்வு செய்த போலீசார், அவர் அடிக்கடி மற்றும் கடைசியாக பெரம்பலூரை சேர்ந்த அப்துல் ஆஃபீஸ் என்ற மாணவருடன் பேசியது தெரிய வந்தது.
இதன் அடிப்படையில் அப்துல் ஹபீசை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், இருவரும் நன்கு பழகி வந்த வேலையில் திருமணம் செய்ய சொல்லி லோகநாயகி அப்துல் கஃபீஸை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்துல் ஆஃபீஸ் அவரது முன்னாள் காதலிகளுடன் இணைந்து லோகநாயகிக்கு எதிராக சதி திட்டம் தீட்டியுள்ளார்.
அதாவது அப்துல் ஹபீஸின் முன்னாள் காதலி ஒருவர் செவிலியர் ஆகவும் மற்றொருவர் ஐடி துறையில் பணிபுரிந்து வரும் நிலையில், மூவரும் லோகநாயகியை ஏமாற்றி சேலத்தில் இருந்து ஏற்காடு வரை தனியாக காரில் அழைத்துச் சென்று, லோகநாயகிக்கு அதிகளவிலான மயக்க மருந்தை செலுத்தி பள்ளத்தில் தள்ளி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதனை எடுத்து போலீஸார் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கையெழுத்து இயக்கம்... தமிழிசை சவுந்தரராஜன் வலுக்கட்டாயமாக கைது...!